பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சுராவின் பாண்டியன் பரிசு- ஒரு மதிப்பீடு என்று இரண்டு உவமைகளால் விளக்குவார். கணவன் மனைவி இருவரிடையே தோன்றி வளர்ந்த கசப்பனைத்தும் "புனத்திலுறும் புல்போல்” வளர்ந்தது என்கின்றார். “அனற் கொள்ளிபட்ட பிள்ளை கதறும்போதில் அம்மா என்பதுபோல்” என்ற உவமை சந்தர்ப்பத்திற்கேற்றவாறு நிகழ்ச்சியைப் பளிங்குபோல் காட்டிப் படிப்போர் கண்களைக் குளமாக்கி விடுகின்றது. நீலியும் அன்னமும் ஒடத்திலேறி உலவும்போது ஒடம் சென்ற காட்சியை, சீர்தேங்கும் வெள்ளன்னம் அசைந்திடாது செல்லல்போல் தெண்ணிரில் சென்றது ஒடம்’ என்று வருணிப்பார். இருபெண்களையும் ஒடம் தாங்கிச்சென்றது. இரண்டு மலர் மாலைகளைத் தட்டொன்று தன்பால் தாங்கிச் சென்றதற்கு ஒப்பாக உள்ளது என்பார். மேகம் எழுந்து மழைபொழியும் காட்சியை நம் பண்டைக் கவிஞர்கள் அற்புதமாக வருணித்துள்ளனர். ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழிமுதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழிவத் தோள்உடைப் பற்பநாபன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் தின்றதிர்த்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை" என்று வருணிப்பர் அன்னை ஆண்டாள். முன்னிக் கடலைச் சுருக்கி எழுத்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மையாளுடையாள், இட்டிடையின் மின்னிப் பொலிந்துளம் பிராட்டி திருவடிமேல் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை யாளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னியவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழை" 20. இயல் - 52:2- பக். 90 21. திருப்பாவை-4 22. திருவெம்பாவை-16