பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய நடை 17 என்று மணிவாசகப் பெருமான் வருணித்து மகிழ்வார்.இந்த இருபெரும் அருட்செல்வர்கள் அமைந்த தொடர் உவமைபோலவே அன்னமும் நீலியும் படகில் செல்லும்போதுவானத்தில் மழைபொழிந்த காட்சியை நம் கவிஞர், கல்வியறிவு அற்றவனின் உள்ளம்போல் இருண்டு, வழக்காடிப் பொருளையெல்லாம் விட்டவனது செல்வம்போல் மின்னி மாய்ந்து, பொருள் இழந்தவன்போல அதிர்ந்து மழையாகிய கண்ணிரை உகுத்தது என்று தொடர் உவமைகளால் சுவையுடன் விளக்குவர். கேள்வியிலார் நெஞ்சம்போல் இருண்டு, நீளும் வழக்குடையார் செல்வம்போல் மின்னி மாய்ந்து வண்பொருளை இதந்தான்போல் அதிர்த்து பின்னர் மழைக்கண்ணிர் உகுத்ததுவான்’ தோழியும் நீலியும் படகில் சென்ற செய்யாற்றில் பெருவெள்ளம் எதிர்பாராமல் வருகின்றது; காற்று மோதியடிப்பதால் படகு கவிழும்போது அதனுள் இருப்பவர் நாலாயக்கமும் தூக்கி எறியப் பெறுவர் என்பதைக் கவிஞர், பழக்குலைமேல் எறித்தகுறுந் தடியே போல பாய்ந்ததொரு பெருங்காற்றுப் படகு நோக்கி" என்ற ஒரு சிறந்த நயமிகு உவமையால் விளக்குவர். இன்னொரு நயமிகு உவமையையும் காட்டுவேன். பேழையைத் தேடிக்கொண்டு சென்ற அன்னம் சோர்வுற்று ஒரு சோலையை அடைகின்றாள். விழியைத் துயில்வந்து கெளவ, துயில்கொள்ளுகின்றாள். இக்காட்சியைக் கவிஞர், கைம்மலரில் தலைசாய்த்துப் புன்சி ரிப்பைக் கனிஇதழில் புதைத்துடலை ஒருக் கணித்துக் கைவல்லான் வைத்தயாழ் போற்கிடந்தான்' என்ற ஓர் அற்புத உவமை மூலம் நம்முன் வைக்கின்றார். மலர் போன்ற கையின்மீது, தன் புன்முறுவலை இதழில் புதைத்து, உடலை ஒருக்கணித்த நிலையில் கைவல்லான் வைத்தயாழ்போல் தரையில் 23. இயல்- 53:1-பக்.92 24. இயல் - 53:1- பக்.92 25. இயல் - 63:1- பக்.19