பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 காவின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு கிடத்துகின்றாள்.நங்கையின் உடல் யாழுக்கு உவமையாகக் கூறுவது அற்புதம். யாழ்நரம்பைத் தடவும்போது இன்னோசை பிறப்பதுபோல் நாரியாரின் உடலைத்தடவும்போது காதல் கலந்த நொப்புல உணர்வு கொடுமுடியை எட்டுகின்றது என்ற கருத்து தொனிக்கின்றது. தொடர் உவமைகளை அமைப்பதில் பாவேந்தருக்கு நிகர் பாவேந்தரே. மேலே ஒர் உவமையைக் காட்டினேன்.அன்னமும் நீலியும் நிகழ்த்திக்கொண்டிருந்த அன்புப் பேச்சில் தொடர் உவமை ஒன்று வருகின்றது.இந்த உடம்பு பொதுவாழ்க்கைக்கு உதவவேண்டும் என்ற தன் கருத்தை உணர்த்தும் வேலன் பேச்சில் இது தோன்றுகின்றது. ஒருசத்தும் பயனில்லா உடம்பை, வாழ்வோ உண்டில்லை எண்ணுமொரு மின்னைத் தின்ன தரிசற்றும் விலகாத கூட்டைச் சான்றோர் தகைப்புக்கே இலக்கான குமிழி தன்னை' என்ற பாடற்பகுதியில் தொடர் உவமையைக் கண்டு மகிழலாம். இத்தகைய தொடர் உவமைகளை வேறோர் இடத்திலும் காணலாம்.பிணத்தைவிட்டெறிந்து பெண்ணுலகை வெறுத்துக்கூறும் வேலன் பேச்சாகவரும் கவிதைகளில் இவற்றைக் காணலாம். 'பேன் நாறி வீழ்குழலைத் தேனாறு என்றும்’ என்று தொடங்கும் கவிதை முதல் வரும் ஐந்து பாடல்களில் வரும் உவமைகள் முற்றத் துறந்த முனிவர்களின் “உடற்கூற்று வண்ணத்தில்” வரும் உவமைகளின் சுவையை விஞ்சிநிற்பதைக் கண்டு மகிழலாம். சுடுகாட்டிற்குச் சென்ற வேலன் பெண்ணை வருணிக்கும், சிவப்பாம்பல் மலர்வாயிற் சித்தும் முல்லைச் சிரிப்புக்கும், கருப்பஞ்சாற் றுச்சொல்லுக்கும் குவிக்கின்ற காதலொளி விழிக்கும்; கார்போல் கூந்தலுக்கும், சாத்த முகத் திங்க ளுக்கும். உவப்புற்றேன்" என்ற பாடற்பகுதியில் காணப்பெறும் உவமைக் கொத்தும் நம்மை மகிழ்விக்கின்றது. 26. இயல் - 55:2. பக்.95 27. இயல் - 87:2. பக். 165 28. இயல் - 35 : 3. பக். 182