பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய நடை 149 பாண்டியன் பரிசை யாரோ சிலர் பதுக்கி விடுகின்றனர். இதனை நடைமுறையில் நாம் காணும் நிகழ்ச்சியை உவமையாகக் கொண்டு விளக்குவர். சிறிது தீனியிட்டு ஆசைகாட்டிக் கோழியை ஏமாற்றிப் பிடித்து விடுவதைப்போல் அதனை அமுக்கிமறைத்துவிட்ட பிறகு, பதுக்கியவர்கள் சொன்னாலன்றி எப்படித் தெரியும்? தீனியிட்டுக் கோழியினை மடக்கு வார்போல் மூடிவிட்டார் பேழையினை அவர்கள் கொஞ்சம் மூச்சுவிட்டால் தானேநாம் அறிதல் கூடும்.” என்று நீலி நீலனுக்குக் கூறும் பேச்சாக வெளியிடுவர். சுவைமிக்க உவமை இது. பூதக் கருத்துக்கும் தாய்போன்ற நரிக்கண்ணனே வீரப்பனின் தோழர்களால் விடப்பட்ட பூதத்தைக் கண்டு அஞ்சியோடி ஆனையூர்ப் பள்ளியை அடைந்து தன் ஆட்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது அங்கு நீலன் வருகின்றான். பூதத்தைக் கண்டு அஞ்சாதிருக்குமாறு பகர்ந்து தானும் ஒரு பூதக்கருத்தை அவர்கள் முன் வைக்கின்றான். எல்லோரும் பூதங்கள்போல் எழில்மாற்றி மொழிமாற்றிக் கிளம்பினால் அரண்மனையிலுள்ள மக்களும் ஊர்ப் பெருமக்களும் அஞ்சிப் போவர் என்கின்றான். சிங்கம்வரக் கண்டஒரு மானைப் போல சேயிழைதன் கூட்டமொடு பறந்து யோவான்’ அன்னம், சிங்கத்தைக் கண்ட மானைப்போல, தன் கூட்டத்தோடு ஒடிப்போவாள் என்று சாதாரண வழக்கில் அடிபடும் உவமையால் விளக்குகின்றான் நீலன். நீலன் கருத்துப்படி நரிக்கண்ணன் ஆட்கள் பூதங்களாக வேடமிட்டு அரண்மனையில் புகுகின்றனர். இந்த நிகழ்ச்சியின்போது அன்னத்தின் வாளுக்கு இரையாகின்றான் வஞ்சக நரிக்கண்ணன். இதனைக் கவிஞர், 29. இயல் - 57:10 - பக்.105 30. இயல் - 70:3- பக். 133