பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 சுராவின் பாண்டியன் பரிசு ஒரு மதிப்பீடு


                              பனையி னின்று 
   காய்இற்று வீழ்வதுபோல் நரிக்கண்ணன்தன்
      கருத்தலைவீழ்ந்ததுவே.அன் னத்தின் வாளால்: 

என்று விளக்குவார்.

        நரிக்கண்ணனின் அமைச்சன் மகன் நிலனும் நீலியும் பேசிக் கொண்டுள்ளனர். நீலியின்மூலம் பாண்டியன் பரிசுபற்றி அன்னத்திற்குத் தெரிந்த செய்திகளைக் கறக்க முயல்கின்றான். குழைந்து பேசிக் காதல் உணர்வைத் தூண்டுகின்றான். நரிக்கண்ணனாகிய கொடியவனைத் தொலைப்பதுதான் தன் தந்தையின் நோக்கம் என்ற அளவிற்கு இறங்கிப் பேசுபவன்.

     விலங்குபழ கிடுவானின் வெள்ளா டொன்று
     வேங்கையிடம் நெருங்கையிலே மகிழ்வதுண்டோ? 
     தெலுங்கினிலே பாடிடுமோர் தமிழன் செய்கை
     தேனென்றா நினைக்கின்றார் தமிழகத்தார்? 

என்கின்றான். விலங்கு பழக்கிடுவானுக்குரிய வெள்ளாடு வேங்கையிடம் நெருங்கும்போது ஆட்டுக்குரியவன் மகிழ்வதில்லை. அப்படித்தான் தன் தந்தையின் நிலையும் என்கின்றான். தன் தந்தை நரிக்கண்ணனிடம் பழகும்போது மகிழ்வதில்லை; விழிப்புடன்தான் இருக்கின்றான் என்பது குறிப்பு. இக்கருத்தை,

   தெலுங்கினிலே பாடிடுமோர் தமிழன் செய்கை 
   தேனென்றா நினைக்கின்றார் தமிழகத்தார்? 

என்ற வேறொரு கருத்தை தம் கொள்கைக் கருத்துடன் ஒப்பநோக்கி வைத்து வேற்றுப்பொருள் வைப்பணிமூலம் சுவையூட்டுகின்றார்.

இங்ங்ணம் உவமைநயங்கள் காவியநடையைச் சிறப்பிக்கின்றன. சொல்லாட்சித்திறன்: கவிதைச் சுவையைக் கம்பநாடன் 'செஞ்சொற்கவி இன்பம்’ என்றான். கவிஞனின் சொல்லாட்சித் திறனும் காவிய நடைக்குச் சுவையூட்டுகின்றது. சிலவற்றைக் காணலாம்31. இயல் - 74:1- பக். 140 32. இயல் - 57 : 20 - பக். 108 33. கம்பரா. பாலகாண்டம்- மிதிலைக் காட்சி - 23