பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் க. அன்பழகனார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றநாள்முதல்நான்நன்குஅறிவேன்.துறையூர் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியனாகப் பணியாற்றிய காலம் (1941-1950) அது. மாணவப் பருவம் முதல் இன்றுவரை பாவேந்தர் படைப்புகளில் மிக்க ஈடுபாடு கொண்டவர் என்பதை நான் நன்கு அறிவேன். ஆழ்ந்த தமிழ்ப் பற்றுடன் தமிழ்ப் பாசறை சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் சில ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து, வள்ளுவர்வழி நின்று, அரசியலுக்கு வந்தவர். இன்றும் மனச்சான்றுக்கு இடம் அளித்து கலைஞருடன்இணைந்து பணியாற்றுபவர்.அவர்தம் வாழ்விலும்,தாழ்விலும் இணை பிரியாதிருப்பவர். அவர் கல்லூரியில் பயின்ற நாள் முதல் நாளிதுவரை என்பால் அன்பு கொண்டிருப்பவர். என்னுடைய தமிழ்ப் பணியைத் தொடர்ந்துமதிப்பிட்டுவருபவர்.இத்தகையநல்லுள்ளம் கொண்ட பேராசிரியர்.இந்தநூலுக்கு அணிந்துரை நல்கிச் சிறப்பித்தமை இந்நூலின் பேறு என்னுடைய பேறுங்கூட,இந்த உழுவலன்பருக்கு என் உளங்கலந்த நன்றி என்றும் உரியது. டாக்டர் கலைஞர் கருணாநிதியை அவர் குழித்தலைத் தொகுதியில் (திருச்சி மாவட்டம் சட்டமன்ற வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற காலம் முதல் (அவர் என்னை அறியாவிட்டாலும் நான் அறிவேன். என்னுடைய உயர்நிலைப்பள்ளி மாணாக்கர்களில் பலர் அவர்தம் விசிறிகள். சிலர் அவர்தம் படத்தை சில குறிப்புகளுடன் இளைஞர் அறிவுச்சுடர் என்ற பள்ளி ஆண்டுமலரில் வெளியிட்டு மகிழ்ந்தனர்.பள்ளித் தலைமையாசிரியனாக இருந்த அன்றுமுதல் இன்றுவரை அவர்தம் அரசியல் பணியைக் கணித்து வருபவன். கல்லூரி எல்லையை மிதியாது தமிழ் எல்லையைக் கண்டு கொண்டவர். அவர்தம் அரசியல் அஞ்ஞாதவாச காலத்தில் சங்க இலக்கியம், திருக்குறள் இவைபற்றிய அவர்தம் படைப்புகளும், பின்னர் எழுதிவரும் கவிதைத் துணுக்குகளும் கட்டுரைகளும், அவர்தம் தமிழிப்பற்றையும்,தமிழ்ப்புலமையையும் பறைசாற்றும்.திருப்பதிப்பல்கலைக் கழகத்தில் இவர் ஆட்சிக் காலத்தில்தான் (அடியேனின் இடையறாத ஒன்பதாண்டு முயற்சியால்) பட்டப் படிப்புவரை இருந்த தமிழ்த்துறை முதுகலை ஆய்வு நிலை (எம்.ஃபில், பிஎச்டி வரை) ஆகிய வசதிகளுடன் வளர்ந்தது. தமிழுக்காக வாரி வழங்குவதில் இவருக்கு நிகர் இவரே. - xii