பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய நடை 123 பழமொழிகள்: ஒரு நாட்டின் பழமொழிகள் அந்நாட்டு மக்கள்பால் அடிபட்டு மலரும் மனஇயல்புகளை எடுத்துக் காட்டுவனவாகும். இவற்றை உரைநடை ஆசிரியர்கள் எவரும் கையாளுவர். பெருங்கவிஞர்களே தம் செய்யுள்நூல்களில் இவற்றைப் பயின்றுவரச் செய்வர். இத்தகைய பழமொழிகள் பாவேந்தரின் பாண்டியன் பரிசில், பயின்று வந்து காப்பிய நடையைச் சிறப்புறச் செய்துவருகின்றன. இப்பெற்றியை எடுத்துக் காட்ட முயல்வோம். அன்னம் முதலியவர்களை நரிக்கண்ணனின் சூழ்ச்சி வலையில் சிக்காமல் காக்கும் வழியை ஆராய்கின்றான் வேழமன்னன். தன் அமைச்சனின் கருத்தை வினவும்போது அவன் கூறுவான். "கொடியோனைக் கதிர்நாட்டை ஆளவிட்டீர்! சீறுகின்ற பாம்புக்குத் தவளையூரில் திருமுடியோ சூட்டுவது?” “இதன் விளைவைப் பின்னர்க் காணப்போகின்றோம்” என்கின்றான். நரிக்கண்ணனுக்கு முடிசூட்டியதை மக்களும் விரும்பவில்லை; மதியமைச்சர்களுக்கும் அச்செயல் உடன்பாடில்லை. நரிக்கண்ணனின் அடாத செயல்களை அறிந்த வேழமன்னன் சீறுகின்றான். “இகழ்ச்சி முடி பூண்டவனே, என் செய்தாய் நீ! இந்நாட்டு மன்னனைப் பின்னிருந்து கொன்றாய். தங்கை என்று பாராது அரசமாதேவியைத் தீர்த்துக் கட்டினாய். பாண்டியன் பரிசினையும் களவாடினாய்” என்னும்போது, அவன் “அன்னத்தைக் கொலை புரிதல் இல்லை; ஆத்தாளையும் கொலை புரிதல் இல்லை; பொன்னொத்த பாண்டியனார் பரிசையும் கண்டதில்லை. நான் பொய்யன் அல்லன்” என்று பீடிகையுடன் "கன்னத்தைத் தன் நகமே கீறிடாது. கதிர்நாட்டை ஆண்டவன் என் மைத்துனன்தான். முறைமாப்பிள்ளையாகிய என் மகன் பொன்னப்பனை அன்னம் மணந்து கொண்டு இந்நாட்டை ஆளட்டும்” என்று நயந்து திசை திருப்புகின்றான், வஞ்சகத்திற்கோர் கொள்களமான பாதகன். அரசனின் சீற்றத்தையும் குறைத்துவிடுகின்றான். 52. இயல் - 30:2-பக் 53 53. இயல் - 40 :1- பக். 67