பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 சுராவின் பாண்டியன் பரிசு ஒரு மதிப்பீடு வீரப்பன் கொய்யாக்குடியில் ஒரு குடிசையில் இருக்கும்போது தோழன் ஒருவன் வருகின்றான். இருவரும் நிகழ்கால அரசாட்சியைப்பற்றி உரையாடுகின்றனர். வீரப்பன் சமுதாய நல . அரசியல் தத்துவத்தையே கூறுகின்றான். அப்போது தோழன் சொல்வான் : பாண்டியன் பரிசைத் தென்மலை தேடும் ஏற்பர்டு செயல்படுகின்றது. பிறர் அவ்விடத்தை அணுகாதிருக்கும் பொருட்டு “பொய்ப்பூதம்" ஒன்றைக் கிளப்பிவிட்டு, "தெருவாரை அழும்பிள்ளையாக்கி விட்டு" அவர்களே பேழையினைத் தேடுகின்றனர். "அம்மலையை இன்றளந்தால் ஆள்மட்டந்தான் ?” என்று கூறியவன் பூதத்தால் மக்கள் அல்லல்படுவதையும் எடுத்துரைக்கின்றான். நரிக்கண்ணனின் அமைச்சன் மகனான நீலன் என்பான் இமைக்கின்ற நேரத்தையும் வீணாக்காமல் பாண்டியன் பேழை அன்னம், ஆட்சி தனக்கு வரும் என்று நப்பாசை கொண்டு இரகசியச் செய்திகளைக் கறப்பதற்காகப் பல முயற்சிகள் செய்து வருகையில் தன் காதலி, நீலி மாலைப்பொழுதில் ஆற்றோரமாக நின்று கொண்டிருப்பதைக் காண்கின்றான். அவளை நெருங்கி “என்ன வியப்பிது நீலி? தேடிப்போன கன்னலொன்று காலடியில் கிடைத்ததைப்போல் கண்ணெதிரில் கிடைத்தாயே!” என்ற பீடிகையுடன் பேச்சைத் தொடங்குகின்றான். 'தேடிப்போன மருந்து காலிலகப்பட்டது போல” என்று உலக வழக்கில் அடிபடும் பழமொழி கவிஞர் வாக்கில் புத்துருவம் பெற்று காவியத்தில் ஏற்ற இடம் பெறுகின்றது. இந்தச் சந்திப்பில் நீலன் குழைந்து பேசுகின்றான். "அன்பே, கதிர் நாட்டானின் சொத்தையும், கவர்ந்துகொண்டான் நரிக்கண்ணன். அன்னத்தின் வாழ்வுக்கே தடைகள் சூழ்கின்றான். இத்தடைகளை நீக்குவதற்கு அவள் முயல்கின்றாளா? பாண்டியன் பரிசின் நிலைமை என்ன? இவற்றை என்னிடத்தில் கூறக் கூடாதா? நான் உன் உயிர்க் காதலன் அல்லவா?” என்று கொஞ்சும் பாணியில் 54. இயல் - 56:5. பக்.99 55. இயல் - 57:2- பக். 102