பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய தடை 125 கெஞ்சுகின்றான். அதற்கு நீலி உரைக்கும் மறுமொழி: கூடுவிட்டுத் தாயைவிட்டுப் பறந்து விட்ட குயிற்குஞ்சு போலன்னம் ஒருத்தி, மன்னர் விடுவிட்டு வேலைவிட்ட ஆத்தா, வேலன், விரல்விட்டே எண்ணிடுமித் தொகையுள்ளார்போய்த் தேடிவிட்டால் கிடைத்திடு மோ.அப்பேழை! தீனியிட்டுக் கோழியினை மடக்கு வார்போல் மூடிவிட்டார் பேழையினை அவர்கள் கொஞ்சம் மூச்சுவிட்டால் தானேநாம் அறிதல் கூடும்?" இதில் உவமையும் பழமொழியும் இணைந்து காவிய நடைக்கு ஒருவித பொலிவினைத் தருவதைக் கண்டு மகிழலாம். அன்னம் இறந்துவிட்டாள் என்ற பொய்வதந்தியை நம்புகின்றான் வேலன். ஏதோ ஒரு பிணத்தைத் தோண்டி எடுத்து அதன் "முழுதழுகி ஊன் கழன்ற முகத்தைக் கண்டு அதனை விட்டெறிந்துவிட்டு நிலையாமை உணர்வால் தூண்டப்பெற்று பெண்ணுலகையே வெறுத்துரைக்கின்றான். எதற்கும் தொண்டு செய்யாத மக்கள் - பெண்களென்னும் நோய்க்கன்றோ நாளெல்லாம் தொண்டு செய்தார் துனிஏறி அடிமரத்தை வெட்டு வார்போல்' தொண்டு செய்கின்றார்களே என்று கழிவிரக்கம் கொண்டு வருந்துகின்றான். இதிலுள்ள பழமொழி மனிதனின் "தலைகீழ்ப் பாடத்தை அப்பட்டமாகக் காட்டுகின்றது; காவிய நடையையும் கம்பீரமாக்குகின்றது. இங்ங்ணம் பாவேந்தரின் காப்பிய நடை, உவமை, சொல்லாட்சி, பழமொழிகள் இவற்றால் சிறப்புற்றுத் திகழ்கின்றது; புதுமெருகையும் பெற்றுவிடுகின்றது. . 56. இயல்-57:10-பக்.105 57. இயல்- 87:8- பக்.169