பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - 8 காவியத்தில் படிமங்கள் இலக்கியத்தைப் படைக்கும் கவிஞன் வாழ்க்கையின் உண்மைகளையும் பிறவற்றையும் தன்னுடைய படைப்பில் அமைத்து மகிழ்கின்றான். அவை கலைகளாக மிளிர்கின்றன. அந்த இலக்கியத்தைப் படிக்கும் நாமும் அவற்றில் ஆழங்கால்பட்டு நம்மையும் மறக்கின்றோம். இதுவே முருகியல் நிலை, மம்மர் அறுக்கு மருந்தாக அமையும்நிலையும் இதுவேயாகும்.இதுவே.உலகிற்கு மூலமாய் நிற்கும் இன்பப் பெருக்கில் ஒன்றுபட்டு வாழும் நிலையாகும். இதுவே நம்மை உயர்த்தும் நிலை; நமது உள்ளம் தேடித் திரியும் நிலையும் இதுவேயாகும். ஒரு கவிஞன் தன் அநுபவத்தைத் தேர்ந்தெடுத்த சொற்களால் உணர்வூட்டி நமக்குத் தருகின்றான். இந்தச் சொற்களே படிமங்கள் (images); சிந்தனை இவற்றின் குறியீடுகளாகப் பணி புரிகின்றன என்பதை நாம் திறனாய்வு இல்க்கியங்கள்மூலம் அறிவோம். பர்ட்டன்’ என்ற திறனாய்வாளரின் கருத்துப்படி கவிதையின் படிமங்கள் சொற்களின்மூலம் நம் புலன்களைத் தொடுகின்றன. புலன்களின்மூலம்படிப்போரின் உணர்ச்சிகளும் அறிவும் விரைவாகத் தூண்டப்பெறுகின்றன. இதன் காரணமாகக் கவிதையின் படிமம் அதிகமாகப் பயன்படுகின்றது. அவ்வறிஞர் மேலும் கூறுவது: “செலுத்தப்பெறும் புலன்களுக்கேற்ப படிமம் வகைப்படுத்தப் பெறுகின்றது. ஆகவே நாம் பெறுபவை: கட்புலப் படிமங்கள் (Visual images) இவற்றில் வண்ணப் படிமங்களும் வடிவப் படிமங்களும் அடங்கும், செவிப்புலப் படிமங்கள் (Auditory images), சுவைப்புலப் படிமங்கள் (Gustatory images), gripújaji's ulginfidisir (Olfactory images), ஊறு அல்லது தொடுபுலப் (நொப்புலப்) படிமங்கள் (Tactualimages) என்பவையாகும்.இவற்றைத் தவிர,இயக்கநிலைப் 1. Burton, N. The Criticism of Poetry (Longmans Er Green Company Ltd. London) P.97