பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 சுரன்ை பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு இதில் எரிவிழி, கருமுகம், நீண்ட பல், குட்டை மயிர் விரிதலை, கொடுவாள் மீசை, நீர்ப்பாம்பு, நெளியும் மார்பு, காரு.ை இவை யாவும் கட்புலப் படிமங்கள். அன்னமும் நீலியும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அன்னம் நரிக்கண்ணனால் கொலையுண்ட தாய் தந்தையரை நினைக்கின்றாள். பனைக்கைஉலும் களிலுபோல் தந்தை யாரும் படருமலர்க் கொடிபோலும் அன்னை யாரும் எனைக்கையிலே ஏந்திவளர்த்தார்கள் ஐயோ! இறக்கையிலே துடிக்கையிலே என்றன் பெண்ணே உனைக்கையில் வைத்தோம்.இப்போதுளத்தில் வைத்தோம் உயிர்விட்டோம் அல்விடுத்தோம் எனச்சென்றாரோ இதில் பனைக்கைஉறும் களிறு, படரும் மலர்க்கொடி, கையிலே ஏந்தி வளர்த்தல், கையில் வைத்தல் என்ற இவை யாவும் கட்புலப் படிமங்கள். பேழையினைத் தேடி அலைந்து அன்னம் ஒரு சோலையை அடைகின்றாள். அப்போது வேலனைப்பற்றி நினைக்கின்றாள். கிளிக்கழுத்தின் பொன்வரிபோல் அரும்பும் மீசை கீழ்க்கடலின் மாலைவெயில் கலந்த நீல ஒளித்திரைபோல் தலைமயிர்சிங் கத்தின் தோற்றம்! உயிர்பரிதி வான்போன்ற மேனி வாய்த்தான்' இதில் கிளிக்கழுத்து, பொன்வரி அரும்பும் மீசை, கீழ்க்கடலின் மாலை வெயில் கலந்தநீல ஒளித்திரைபோல்தலைமயிர், சிங்கத்தின் தோற்றம், பரிதி வான்போன்ற மேனி இவை யாவும் கட்புலப் படிமங்கள்.' செவிப்புலப் படிமங்கள்: காதினால் மட்டிலும் கேட்டு உள்ளத்தைப் பறிகொடுக்கச் செய்யும் படிமங்கள் இவை. பாண்டியன் பரிசில் சிலவற்றைக் காண்போம். நரிக்கண்ணனுக்கு முடிசூட்டப் போவதை முரசறைந்து முழக்குவதை, 4. இயல். 51:1- பக். 39 5. இயல்- 62 : 4- பக். 117