பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியத்தில் படிமங்கள் 129 . . . . முழக்குகின்றான்; அன்னோன் வாழ்வின் “முடி”வைத்தான் முழக்குகின்றான். முரசறைந்தே" என்பர் கவிஞர். "இதில் முழக்குகின்றான்” என்பதில் முரசொலி கேட்கின்றதல்லவா? எதிரிகள் ஆத்தாளின் குடிசையைச் சூழ்கின்றனர். முழங்கிற்றுக் குதிரைகளின் அடிஒ கைதான்? இதில் குதிரைகளின் அடிஓசை செவிப்புலப்படிமம். பேழையைத் தேடித் தருவோன் அன்னத்தைமணப்பான் என்று முரசறையப் பெறுகின்றது. கதிர்நாட்டின் வீதியெல்லாம் யானை மீது கடிமுரசம் முழங்கினான்" இதில் “முழங்கினான்” என்பது செவிப்புலப் படிமம்.நீலியும் அன்னமும் பேசிக்கொண்டிருந்தபோது நரிக்கண்ணன் மகன் வருகின்றான். அன்னத்தின்மீது தான் கொண்டிருக்கும் காதல்பற்றி உளறிக் கொட்டுகின்றான். அன்னத்திற்குச் சிரிப்பு அடக்க முடியவில்லை. இதனைக் கவிஞர், செவ்விதழின் கதவுடைத்து வரும்சி ரிப்பைத் திருப்பிஅழைத் துள்ளடக்கிக் கொண்டி ருத்தாள்" இதழ் கதவுடைத்தல் என்பது செவிப்புலப் படிமம். சுவைப்புலப் படிமங்கள்: நாவினால் பெறும் அநுபவத்தைத் தருபவை.இவை.பாண்டியன் பரிசில் சிலவற்றைக்காண்போம். வேலன் நெஞ்சம் அன்னத்தின்மேல் உள்ளது என்பதைக் கவிஞர், கன்னலிலே சாறெடுத்து தமிழ்கு ழைத்துக் கனிஇதழாற் பரிமாறும் இனிய சொல்லாள் அன்னத்தின் மேல்வைத்தான் நெஞ்சை வேலன்" என்று காட்டுவார். இதில் கன்னலின் சாறு, தமிழ் குழைத்தல், கனி இதழால் பரிமாறுதல் என்பவை சுவைப்புலப்படிமங்கள்.நீலியின் மூலம் 6. இயல் - 23:2. பக். 44 7. இயல்- 24:1-பக். 46 8. இயல்-43:1 பக்.72 9. இயல்-46:7-பக்.78 10. இயல்-76:1-பக். 143