பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்மைக் காலத்தில், தமிழ் வளர்ச்சிக்காகக் குறள் பீடம் நிறுவியமை இவர்தம் தமிழ்பணியின் இமயக்கொடுமுடி. இத்தகைய தமிழுள்ளம் கொண்டதமிழினத் தலைவர்பால் அடியேன் கொண்டிருக்கும் மதிப்புக்கும் மரியாதைக்கும் அறிகுறியாக இந்நூலை அவருக்கு அன்புப் படையலாக்கி மகிழ்கின்றேன்; பெருமிதமும் கொள்கின்றேன். என் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாக இருப்பவன் ஏழுமலையான். நல்லது நேரும்போது, மகிழ்ச்சி மயக்கத்தில் தள்ளப் பெறாமலும் அல்லது நேருங்கால் தொல்லையுள்சிக்கி மனம் வருந்தாமலும் உள்ள மனநிலையைத் தந்து வாழ்விப்பவன். பல்லோர் உதவியும் இணக்கமும் பெறுவதற்கும் இவனே காரணன் - கருமமும் கரும பலனும் ஆகிய காரணன் (திருவாய் 35 : 1.0) என்பது நம்மாழ்வாரின் திருவாய்மொழியன்றோ? இத்தகைய பெருமானை வாழ்த்தி வணங்கிச் சரணம் அடைகின்றேன். நோற்றேன் பல்பிறவி தன்னைக் காண்பதோர் ஆசையினால் ஏற்றேன் இப்பிறப்பே இடர்உற் றனன்னம் பெருமான் கோல்தேன் பாய்ந்த ஒழுகும் குளிர் சோலைசூழ் வேங்கடவா! ஆந்றேன் வந்தடைந் தேன்.அடியேனை ஆட்கொண்டு அருளே’. - திருமங்கையாழ்வார் "வேங்கடம் - ந. சுப்பு ரெட்டியார் ஏ.டி 13, அண்ணாநகர், சென்னை - 600 040. 2. பெரி - திரு. 19:8 - xiii