பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியத்தில் படிமங்கள் 13t கலைந்ததுவே என்காதல் ஒலி வந்தான்! எனக்கூறிக் கட்டழகன் உடலை அள்ளி அனைத்திட்டான் மலர்க்கையால் கன்னம் உச்சி அணிமார்பு தடவினான்: ஈட்டி யாலே தணல்போலும் புண்பட்ட முதுகு கண்டாள்." இதில் அணைதல், மலர்க்கை, கன்னம் உச்சி, அணி மார்பு தடவுதல் ஆகியவை நொப்புலப் படிமங்கள்.” தாய்தந்தையரை இழந்த அன்னத்தின் சிறிய உளம் பெரிய துன்பத்தைப் பொறுக்க முடியாது வேதனையுறுகின்றது. ஒப்புரைக்க முடியாத அன்னை என்னை ஒருக்கணித்து மாப்பனைத்து மேனி யெல்லாம் கைப்புறத்தில் ஆம்படிக்குத் தழுவி என்றன் கண்மறைக்கும் அரிகுழலை மேலொ துக்கி மைப்புருவ விழிமீது விழிய மைத்து மலர்வாயால் குளிர்தமிழால் கண்ணே என்னு: செப்பிமுத்த மிட்டானே! அன்புள் ளாளின் செத்தாமரைமுகத்தை மறப்பேனோதான்?" இதில் ஒருக்கணித்து மார்பனைத்தல், மேனியெல்லாம் கைப்புறத்தில் ஆம்படிக்குத் தழுவுதல்,கண்மறைக்கும் அரிகுழலைமெலொதுக்குதல், மைப்புருவ விழிமீது விழியமைத்தல், மலர்வாயால் குளிர்தமிழால் கண்ணே என்று செப்பி முத்தமிடுதல் என்றவையெல்லாம் நொப்புலப் படிமங்களாகும். இயக்கநிலைப் படிமங்கள்: ஒரு பொருள் அல்லது மனிதனின் இயக்கத்தை விளக்குவதுபோல் அமைவது இப்படிவம். ஆத்தாளின் குடிசையை எதிரிகள் சூழ்கின்றனர். வேலன் அவர்களைத் தொடர்ந்து வருகின்றான். 14. இயல்- 8:1,2- பக். 12 15. இயல் - 22:3- பக். 43