பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 கனவில் பாண்டியன் பரிசு ஒரு மதிப்பீடு பெருவாளும் குதிரையும்பாய்ந் தணப கைமேல்! பலகுதிரை மறவரின்மேல் வேலன் எட்டிப் பாய்ந்தன்ைபல் ஆடுகட்குன் வேங்கை போலே!" இதில் பெருவாளும் குதிரையும் பாய்தல், வேலன் எட்டிப் பாய்தல் என்பவை இயக்கநிலைப் படிமங்கள். பேழையைத் தேடுகையில் ஆத்தாள் வீரப்பன் கணுக்காலை வெட்டுகின்றாள்: வீரப்பன் ஆத்தாளின் இடக்கையை வெட்டி வீழ்த்துகின்றான். ஒருவரையொருவர் அறிந்து கொள்ளாமல், இருவரும் அருகருகே துடித்து வீழ்கின்றனர். இக்காட்சியைக் கவிஞர், செந்நீரில் புரளுகின்ற இரண்டு டம்பும் தெண்ணீரின் கரைமீனாய்த் துடிக்கும்' என்றுவருணிப்பார்.இரண்டு உடம்பு செந்நீரில்புரளுதல், தெண்ணிரில் கரைமீனாய்த் துடித்தல் இவை இயக்கநிலைப் படிமங்கள். அரசனையும், அரசமாதேவியையும் கொன்று தீர்த்த நரிக்கண்ணன் ஆத்தாளை, அன்னத்தை, பேழையை அடையாளப்படி எங்கும் படையாளர்கள் தேட வகை செய்கின்றான். இவன் எதிரில் வேழமன்னன் வருவதைக் கவிஞர், கோத்தான முத்துலவு மார்பினோடு குன்னுதடை கொண்டதுபோல சென்று நின்றான்! சாய்த்தானே தரிக்கண்ணன் மன்னவன்பால்" என்று வருணிப்பர். இதில் குன்று நடைகொண்டதுபோல் செல்லல், நரிக்கண்ணன் மன்னவன்பால் சாய்தல் இவை இயக்கநிலைப் படிமங்கள். “எட்டி'பூத உருவத்துடன் வந்து கூச்சலிடுகின்றான். இதனைக் கண்டு மக்கள் வெருண்டுநாலாயக்கமும் ஒடுகின்றனர். ஒருவன் பூதம் வீதிவரை வந்ததைப் பார்த்ததாகக் கூறுகின்றான்.இந்த நிலைமையை வருணிக்கின்றார் கவிஞர். 15. இயல் - 241, 2- பக், 46 17. இயல் - 37:2-பக் 5: 18. இயல்-14: பக் 22