பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியத்தில் படிமங்கள் 133 காலிருந்தும் போதாமல் இறக்கை வேண்டிக் கடிதாக ஓடினான் ஐயோ என்றே! அவளோடக் கண்டொருவன் ஒட அங்கே அத்தனைமே ரும்பறத்தார் பூதம் பூதம் இவனோடி வந்ததெனக் கூச்சலிட்டார்: இவ்வீதி அவ்வீதி மக்கள் எல்லாம் கவனோடும் கல்லைப்போல் விரைந்தாரேனும் எவ்விடத்தில் போவதென்றும் கருத வில்லை கவலைஎருதுகள்போல மக்கள் யாரும் கால்கடுக்க நகர்சுற்றிச் கற்றி வந்தார்." இதில் கடிதாக ஒடுதல், கண்டொருவன் ஒடுதல், அத்தனை பேரும் பறத்தல், இவண் ஒடி வந்ததெனல், கவண் ஒடும் கல்லைப்போல் விரைதல், கவலை எருதுகள்போல் கால்கடுக்க நகர்கற்றிச் சுற்றி வருதல் - இவை யாவும் இயக்க நிலைப் படிமங்கள். இங்ங்னம் இயக்கநிலைப் படிமங்கள் பாட்டில் அமைந்து பாட்டதுபவத்தை மிகுவிப்பதைக் க்ண்டு மகிழலாம். கலவைநிலைப் படிமங்கள்: பாவேந்தரின் சில பாடல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பல்வேறு படிமங்கள் கலந்து கவிதைக்குப் பொலிவூட்டி பாட்டநுபவத்தை மிகுவிக்கின்றது. - குயிலி னங்கள் திருச்சின்னம் ஊத, நறுந் தென்றல் வீசச் செவ்வடியால் அன்னம்:உலா வரும்தா டான்வீர்" வேழமன்னன் கொலைக்குற்றம் சாட்டிச் சீறும்போது நரிக்கண்ணன் தன் மகனை அன்னம் மணந்து கொண்டு நாடாளட்டும் என்று கூறும்முன் அரசனை விளித்துப் பேசுவது இது. "குயிலினங்கள் திருச்சின்னம் ஊத” என்பதில் செவிப்புலப் படிமமும், "நறுந்தென்றல் வீச” என்பதில் நொப்புலப் படிமமும், "செவ்வடியால் அன்னம் உலாவரும்” என்பதில் இயக்கநிலைப் படிமமும் கலந்து அமைந்து கவிதைக்குப் பொலிவூட்டுவதைக் கண்டு மகிழலாம். 19. இயல்- 49: 4, 5 - பக். 86 20. இயல் - 40 :2- பக். 67