பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கதகன் பாண்டியன் பரிசு ஒரு மதிப்பீஇ பேழைக்குப் புலன் கேட்டுத் திரிந்த அன்னம் ஒரு சோலையை அடைகின்றதைக் கவிஞர், அகல்வானில் விட்டுவிட்டு மின்னல் போல ஆங்காங்குச் சென்றுபின் மீண்டாளாகிப் பகல்வாணம் மாணிக்கப் புனலாடுங்கால் படர்முல்லை சிரித்திருக்கும் சோலை கண்டு புகலானான் குதிரையினை விட்டாள். அங்குப் புன்னைவரவேற்பளிக்கத் தென்றல் வந்து துகின்உடலில் மணந்தடவ இசையரங்கு தும்பிலார் துவக்கினார் அமர்ந்தாள் அன்னம்' என்று கூறுவார். அகல்வானில் விட்டுவிட்டு மின்னல்போல, படர்முல்லை சிரித்திருக்கும் சோலை,புன்னை வரவேற்பளித்தல்,இவை கட்புலப் படிமங்கள்; தென்றல் வந்து துகிர் உடலில் மணம் தடவ நொப்புலப் படிமம்; இசையரங்கு தும்பியார் துவக்குதல் செவிப்புலப்படிமம்: பகல்வானில் மாணிக்கப் புனலாடுதல் இயக்கநிலைப் படிமம் இந்த நான்கு வகைப்படிமங்களும் கவிதைக்குப் பொலிவூட்டுவதைக் கண்டு மகிழலாம். நீலனும் நீலியும் நீலன் வீட்டில் உரையாடிக் கொண்டுள்ளனர். உரையாடலின் முடிவுநிலையைக் கவிஞர், வட்டிலிட்ட வெற்றிலைக்குச் சீவல் நெய்யால் வலுத்தெடுத்து நிறுத்ததிறை மணமும் சேர்த்துத் தட்டிவிட்டுச் செம்பினிலே இன்பால் பெய்து தனித்தனியே முக்கனியின் சுவையும் இட்டுப் பட்டிவிட்ட மேல்விளிப்பில் பூவ டிப்பைப் பாரெல்லாம் மணம்பரவத் தெளித்துத் தங்கக் கட்டிலிட்ட அறைகாட்டி நீலி தோள்மேல் கைவிட்டான் பெருவீடு கமழச் சென்றார்’ என்று காட்டுவார். இது நீலன்-நீலியின் புணர்ச்சி மகிழ்தலைக் காட்டுவது. வட்டிலிட்ட வெற்றிலை, சீவலைத் தட்டிலிடுதல், கட்டிலிட்ட அறை இவை கட்புலப் படிமங்கள்; சீவலை வறுத்தெடுத்து மணமும் சேர்த்தல் நாற்றப்புலப் படிமம் செம்பினிலே இன்பால் பெய்தல், 21. இயல் - 52:1- பக்.116 22. இயல் - 58:8- பக். 130