பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியத்தில் படிமங்கள் 138 தனித்தனியே முக்கனியின் சுவையிடுதல் இவை சுவைப்புலப் படிமங்கள் பட்டிலிட்ட மேல்விரிப்பில் பூவடிப்பைப் பாரெல்லாம் மணம் பரவத் தெளித்தல், நீலிதோள்மேல் கையிடுதல், பெருவிடு (பேரின்பம் கமழச் செல்லுதல் இவை நொப்புலப் படிமங்கள். இதிலும் நால்வகைப் படிமங்களும் இணைந்து கவிதைக்கு நற்சுவையூட்டிநிற்றலைக் கண்டு மகிழலாம். நீலியும் அன்னமும் செய்யாற்றில் ஒடத்தில் உலாவச் செல்லும்போது எதிர்பாராத விதமாக மழையும் பெருங்காற்றும் ஏற்பட்டதால் விபத்துக்குள்ளானபோது வேலனால் காக்கப்பெற்று குடிசைக்குக் கொணரப்பெற்றார்கள். ஆத்தாள் அன்னத்துக்குச் செய்த உபசாரத்தைக் கவிஞர், நனைந்தசூழலுக்குச்சத் தனம்பு கைத்து நளிருண்டோ எனநெற்றி, தொட்டுப் பார்த்துப் பனம்பழத்தின் சாறட்ட பனாட்டுத் தேனும் பரிந்தளித்துக் கருங்குயிலை அருந்தச் சொல்லி நினைத்திருந்தேன் மறந்துவிட்டேன் செங்க ரும்பை நெறித்தெடுத்த சாற்றுக்கற் கண்டு காய்ச்சப் புனைந்துவைத்தேன் முல்லையிலே கண்ணி ஒன்று புரிகுழலில் வைஎன்று தந்தான் ஆத்தா' என்று காட்டுவார். நனைந்த குழலுக்குச் சந்தனம் புகைத்தல், நாற்றப்புலப் படிமம்:நளிருண்டோ என நெற்றியைத் தொட்டுப்பார்த்தல் நொப்புலப் படிமம், பனம்பழத்தின் சாறட்ட பனாட்டுத்தேனும் பரிந்தளித்தல், செங்கரும்பை நெறித்தெடுத்த சாற்றுக்கற் கண்டு சுவைப்புலப் படிமங்கள். கருங்குயில் கட்புலப் படிமம், முல்லையிலே கண்ணிஒன்று புரிகுழலில் வைக்குமாறு தருதல் இயக்கநிலைப்படிமம். இதில் ஐந்துவகைப் படிமங்கள் அமைந்து பாட்டின் சுவையநுபவத்தைப் பன்மடங்கு உயர்த்துகின்றன. மின்வெட்டுப் போன்ற மணிமொழிப் படிவங்கள்: இவன் காட்டிய பல்வேறு வகைப் படிமங்களைத் தவிர பல்வேறு இடங்களில் கவிஞரின் சொற்களிலும் சொற்றொடர்களிலும் மின்வெட்டுகள் 23. இயல் - 54 : 3-பக்.94