பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 காவின் பாண்டியன் பரிசு ஒரு மதிப்பீஇ போன்ற பல்வேறு படிமங்கள் பாங்குற அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம். அவற்றுள் சிலவற்றை ஈண்டு எடுத்துக் காட்டுவோம். சிமிழ்க்காத விழி, எரியும் கண்ணாள் தணல் சிந்தும் விழி, கிளியுதடு கனல் சிந்தும் நகைப்பாலே நெருப்பாக்கி, நெய்யாலே மூண்டெழுந்த நெருப்பு ஒளிதிகழும் கிளிச்சிறைப்பொன், தீத்தாவும் கண், தீத்தாவும் கண்ணுடையார்முகில் கிழித்து வரும் நிலவு, நரிக்கண்ணன் மகனாய் வந்த கொழுக்கட்டை எரிவீழும் கண், எரிவிழி, ஒளிவிளக்கும் கதிரவன், பனைக்கைஉறும் களிறு, படரும் மலர்க்கொடி, கிளிக்கழுத்தில் பொன்வரி, கைமலரில் தலைசாய்த்து, சேலின் விழி மகிழ்ச்சி, தென்னம் பாளைக்கு நிகரான நகைமுகம், சிவப்பாம்பல் மலர்வாய், கருப்பஞ்சாற்றுச்சொல்-இவையாவும் கட்புலப் படிம வகை வாள் அதிர்ப்பு, கிளி மொழியாள், சிரிக்க உடல் எடுத்தவன், 'கிரீச் சென்னும் சுவர்க்கோழி. இவை செவிப்புலப் படிமவகை. கன்னலின் சாறே (விளி), முப்பழத்தின் சாற்றுக்கு நிகரான மொழியாளே (விளி), காட்சித் தேனில் வண்டு, கன்னல் மொழி, கோவை இதழ், தேனிதழாள் - இவை யாவும் சுவைப்புலப் படிமவகை மாந்தளிர் மெல்லுடல், செந்தாமரை இதழால் வாயிதழ், தாமரைக் கண் இமை, தளிர்மேனி, என்பவை நொப்புலப் படிம வகை. பாட்டின்பம்: இந்தப் படிமங்களின் செயல்களைச் சிந்திப்போம். நம் உடல்துண்டல்-துலங்கல் (Stimulus-response) என்ற உளவியல் தத்துவப்படி இயங்குகின்றது. உள்ளமும் அதற்கேற்பத் துலங்குகின்றது. வெளியுலகிலிருந்து தூண்டல்கள் புலன்களைத் தாக்கும்போது (Sensory level) அவற்றிற்கேற்பத் துலங்குகின்றன. அஃதாவது அப்புலன்கள் அத்துரண்டல்களால் கிளர்ச்சி யடைகின்றன. அதனால் ஏற்படும் உணர்ச்சியை மனம் அநுபவிக்கின்றது.இந்த உணர்ச்சிப் பெருக்கில் உண்டாகும் இன்பமே - முருகுணர்ச்சியே - சந்தர்ப்பத்திற்கேற்ப ஒன்பது சுவைகளாகப் பரிணமிக்கின்றன. எடுத்துக்காட்டாக, மணப்பொருள்கள் தரும் மணத்தை நாற்றப்புல நரம்புகள் வாங்கி மூளைக்கு அனுப்புகின்றன. மனம் அப்பொருள்களை நல்கும் மணத்தைத் துய்க்கின்றது. ஊதுவத்தியின் மணம் செயற்படுவதைக் கருதலாம். இங்ங்ணமே