பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியம் 2 வாழ்க்கையிலும் மனிதப் பண்பிலும் உள்ள பொதுத் தன்மையை எடுத்துக் கூறுவதே கவிதையின் நோக்கமாகும். கவிதை வாழ்க்கையின் திறனாய்வுதானே. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற உயர்ந்த கொள்கை குறிக்கோள் - கவிதைத் துறையில் எளிதாக நிறைவேறி விடுகின்றது. கவிருனின் மனத்தில் தோன்றிய அநுபவமே கவிதையாக உருப்பெறுகின்றது; மலர்கின்றது. கவிதையைப் படிக்கும் நாமும் அக்கவிஞன் பெற்ற அநுபவத்தையே பெற்றுவிட்டால், கவிதையும் உணர்த்த வேண்டியவற்றை உணர்த்தி விடும்நிலையை அடைந்து விடுகின்றது.திருவாசகத்தேனை மாந்திய அறிஞர்களில் பலர் தம் அதுபவத்தை வெளியிட்டுள்ளனர். வேற்றுச் சமயத்தைச் சார்ந்த வேற்று நாட்டினராகிய ஜி.யு.போப் இதன் பக்திச் சுவையில் ஈடுபட்டு இதனையொத்த பக்தி நூல் யாண்டும் இல்லை என்று கூறினார்; என்பையும் உருக்கவல்ல இலக்கியம் என்று சாற்றினார். சிவப்பிரகாச அடிகள், திருவாசகம்இங்கொருகால் ஓதின் கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள் தொடுமணற்கேணியின் கரந்துநீர் பாய அன்பர் ஆகுநர் அன்றி மன்பதை உலகில் மற்றையர் இலரே” என்று தம் அநுபவத்தை எடுத்தோதுகின்றார். சமயத்துறையில் எங்கும் சமரசத்தைப் பரப்பியவள்ளல் பெருமானும் திருவாசகத்தில் ஈடுபட்டுப் படித்ததால், நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கணிதீஞ் சுவைகலந்து 1. திருமந்திரம் 85 2. நால்வர் நான்மணிமாலை - 4.