பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியம் உணர்த்தும் உண்மைகள் 139 ஊன்கலத்து உயிர்கலத்து உவட்டாமல் இனிப்பதுவே" என்று தம்மை மறந்து பாடுவார். உயர்கவிதைகள் யாவும் அவற்றில் ஈடுபட்டுப் படிப்போரிடம் கவிஞர்களின் அநுபவத்தையே பெறவைத்து விடுகின்றன. தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தமட்டிலும் தமிழ்க் கவிஞர்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கம் என்ற கொள்கையினையுடையவர்களாக இருந்தனர் என்று கருதலாம். உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப் புரத்தின் வளமுருக்கிப் பொல்லா மரத்தின் கனக்கோட்டம் தீர்க்குது லஃதேபோல் மாந்தர் மனக்கோட்டம் தீர்க்கும்நூல் மாண்பு' என்ற நன்னூலாசிரியர், பவணந்தி முனிவரின் கூற்றினாலும் இதனை அறியலாம். இதனால் மக்களின் அறியாமையைப் போக்கி அறிவு கொளுத்துதல் கவிதையின் முதன்மையான வேலையாயிருத்தல் வேண்டும் என்பது பெறப்படுகின்றது. கவிதையின் தலைமைப் பண்பு:கவிதையின் தலைமைப் பண்பு அஃது உணர்த்தும் உண்மையில்தான் உள்ளது.மனித அநுபவத்திலும் இயற்கையிலும் நாம் சாதாரணமாகக் காணாத புலனுணர் ஆற்றலுடைய அழகுகளையும் ஆழ்ந்த உண்மைகளையும் அது காட்டுகின்றது. நம்மில் ஒரு சிலருக்குக் கவிதை உணர்வும் உட்காட்சியும் (Insight) ஒரளவு அமைந்துள்ளன.ஆனால்,இவர்களில் பெரும்பாலோரிடம் இத்தகைய கவிதைத் திறன் சாதாரண வாழ்க்கையின் இருப்புநிலைகளால் நெருக்குண்டு, அன்றாட வாழ்க்கையின் கூறுகளாகவுள்ள உலகாயதக் கவர்ச்சிகளால் குன்றச் செய்யப்பெற்று, சிலசமயம் நனவு நிலையிலும், அல்லது நனவிலி நிலையிலும் நசுக்கப் பெறுகின்றது. ஆனால், உண்மைக் கவிஞனிடம் உலகப் பொருள்களில் அழகினையும், ஆழ்ந்த உண்மைகளையும் கானுந்திறன் ஈடு எடுப்பற்ற அளவிலுள்ளது; அன்றியும், நாம் 3. திருவருட்பா : ஆளுடைய அடிகள் அருள் மாலை - 7 4. நன்னூல்- 15.