பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 அணின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு காண்பவற்றையும் கேட்பவற்றையும் தெளிவாக வெளியிட்டுக் கூறுந்திறனும் அமைந்து கிடக்கின்றது. இவ்விளக்கத்தைப் படிக்கும் நம்முடைய கற்பனையும் ஒத்துணர்ச்சியும் துடிப்பும் பெற்று அவற்றை அக்கவிஞனுடன் சேர்ந்து காணவும் உணரவும் செய்து விடுகின்றது. எனவே, கவிதை நமக்குக் கவிஞனின் உள் நோக்குடன் நாமாகவே வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கிப் பொருளுணரவும் கற்பிக்கின்றது என்றும், நம்முடைய பார்வையையும் ஒத்துணர்ச்சியையும் உரம்பெறச் செல்கின்றது என்றும் தெளிகின்றோம். காவியப்பண்பு: தலைவன் ஏவலாளருக்குக் கூறுபவை அறநூல்கள் என்றும்,நண்பர்கள் ஒருவருக்கொருவர் கூறும் முறையில் அமைந்தவை புராணங்கள் என்றும், கணவனுக்கு மனைவி உரைப்பது போன்றவை காவியங்கள் என்றும் ஒருவன்கப் பாகுபாடு உரைப்பர் வடமொழி வாணர்கள். இல்வாழ்க்கையில் சொற்களைவிட உள்ளத்து உணர்ச்சிகளே ஆற்றல் மிக்கவை என்பதும், சொற்களால் .ணர்த்துவதே மிகுதி என்பதும் நாம் அறிந்தவை. இக்காரணத்தால் ான் ஒரு சில வரிகளாலான அகத்துறைச் சங்கப்பாடல்கள் உணர்ச்சியைக் கொட்டி நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. இத்தகைய உணர்ச்சிதான் காவியங்களிலும் அமைந்து கிடக்கின்றது. ஒழுக்கம், அறம் முதலியவற்றை அதிகமாக நேரே கூறி வற்புறுத்தாமல் கற்பனையநுபவத்தின் வாயிலாகவும், காவிய மாந்தர்களின் கூற்றுவாயிலாகவும், அப்பாடல்கள் உள்ளத்தில் தாமே சென்று பதியும் முறையில் அமைந்து விடுகின்றன. இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் “பாண்டியன் பரிசு” உணர்த்தும் உண்மைகளைக் காண்போம். முடியாட்சியின் குறைகள்: பாவேந்தர் முடியாட்சியை விரும்பாதவர்; பாண்டியன் பரிசில் அந்த அரசின் சூழ்ச்சித்திறன்கள், தில்லுமுல்லுகள் முதலியவற்றைப் பட்டவர்த்தனமாக்குகின்றார். கதிர்நாட்டைக் கைப்பற்றி அதன் ஆட்சியைத் தன்வசப்படுத்தக் 5. இந்த இயலின் தொடக்கம் முதல் இதுவரை இவ்வாசிரியரின் "பாஞ்சாலி சபதம்- ஒரு நோக்கு" என்றநூலின் இயல்- 11 இல் பக்131-134 இல் உள்ள பகுதிகள் அப்படியே எடுத்துக்கொள்ளப் பெற்றுள்ளன.