பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியம் உணர்த்தும் உண்மைகள் 141 கருதிய வேழநாட்டுப் படைத்தலைவன் (அன்னத்தின் தாய் மாமன்; கதிர்நாட்டரசன் கதிரை வேலன்மீது அடாதபழிகளைச் சுமத்தித் தன் அரசன் வேழ நாட்டானைப் படை எடுத்து வரச் செய்கின்றான். இரண்டு அரசர்களும் வாட்போர் புரிந்துகொண்டிருக்கையில் நரிக்கண்ணன் கருந்திரைக்குள் உடல் மறைத்துக் கொண்டும் முகமூடி அணிந்துகொண்டும் பின்புறமிருந்து நடு முதுகில் ஈட்டியைப் பாய்ச்சிக் கொன்றுவிடுகின்றான். தான் அணிந்திருந்த கருந்திரையையும் முகமூடியையும் அங்கு நின்ற தன் ஆள் ஒருவனை அணியச் செய்து விடுகின்றான். தன் தங்கையிடம் தன் மைத்துனன் இறந்தமைக்கு நீலிக் கண்ணிர் வடித்து முகமறைந்த ஒரு தீயன் முடுகி வந்து நடுமுதுகில் ஈட்டியைக் கண்டுதான்திகைத்தமையைக் கூறுகின்றான். இந்த நிலையில் கரிய உடை அணிந்த ஆள் நரிக்கண்ணனைச் சந்தித்து மேலும் செய்ய வேண்டுவதென்ன எனக் கேட்க வரும்போது தன் தங்கை கண்ணுக்கினியாள் நீதானா மன்னனின் பின்புறத்தில் ஈட்டி பாய்ச்சினவன் ?” என்று வாளைத் தூக்கி அவன்மீது பாயும்போது அவன் “அன்னையே, இந்தக் கரிய உடை தந்தவர் இந்த மகானுபாவரே; தம் முன்னே மன்னன்மீது ஈட்டி எய்தவர் இவரே" என்று உரைக்கின்றான். உண்மை வெளிப்பட்டதே என்று கருதிய நரிக்கண்ணன் இடையில் மறைத்து வைத்திருந்த வாளைக்கொண்டு தன் உடன்பிறப்பை, அரசி தன்னை, வெட்டிச் சாய்க்கின்றான். அடுத்து அன்னத்தைக் கொல்லத் திட்டம் போடுகின்றான். வேழ மன்னனிடம் நீலிக்கண்ணிர் வடித்து முடிசூட்டப் பெறுகின்றான். முடியாட்சியில் இத்தகைய செயல்கள் நடைபெறக் கூடும் இன்னும் எண்ணற்ற முறைகளில் முறைகேடுகள் நடைபெறக் கூடும் என்று கருதிய கவிஞர் முடியாட்சியை - கோனாட்சியை - வெறுக்கின்றார். குடியாட்சியையே விரும்புகின்றார். இதனை வீரத்தாய், கடற்மேற் குமிழிகள், புரட்சிக் கவி, குறிஞ்சித் திட்டு முதலிய இலக்கியங்களில் குடியாட்சி முறையையே முடிவாக்கிக் காவியங்களைத் தலைக்கட்டுகின்றார். ஆனால், பாண்டியன் பரிசில் அன்னம்-வேலன் திருமணமும் முடிசூட்டு விழாவும் ஒரே சமயத்தில் நிறைவெய்துமாறு காவியத்தை முடிக்கின்றார் என்றபோதிலும், இக்காவியத்தில் முடியாட்சி முறையை அமைத்து விடுகின்றார். கவிஞர் இந்த முடிவை