பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 சுராவின் பாண்டியன் பரிசு - ஒரு மதிப்பீடு மேற்கொண்டமை நமக்கு இன்னும் விளங்காப் புதிராகவே அமைகின்றது. சாதி ஒழிப்பு முறை சாதி அமைப்பு முறை இந்தியாவின் ஒரு பழிச்சின்னம். அதனை அடியோடு ஒழித்துக்கட்ட முயல்கின்றார். தம் பேச்சிலும் எழுத்திலும் அம்முறையைக் கடிகின்றார். இந்தக் காவியத்தில் சாதி அமைப்பைப்பற்றிய கூற்றுகள் பல் இடங்களில் வருகின்றன. நரிக்கண்ணனின் மகன் - கொழுக்கட்டை அன்னத்திடம் "நான் அரசன் மகன்” என்று பெருமையோடு சொல்லிக்கொண்டு அரசன் மகளாகிய அன்னம் தன்னை மணப்பதுதான் பொருத்தம் என்ற குறிப்பைத் தருகின்றான். இத்தகைய குறுகிய கருத்தினைத் தகர்க்க முனைகின்றார் க்விஞர். காவியத் தலைவி அன்னம் வேழமன்னனிடம் பாண்டியன் பரிசைத் தேடித் தருவோனையே தான் மணக்க விரும்புவதாகவும், இதனை முரசறைந்து மக்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் வேண்டுகின்றாள். ஒருத்தன்னனை மனப்பதெனில் அன்னோன் என்றன் உயர்பேழை தனைத்தேடி தருதல் வேண்டும்.” என்றும், என்பாண்டி வன்பரிசை எனக்களிப்போன் எவனெனினும் அவனுக்கே உரியோன் ஆவேன்’ என்றும் "உயர்சாதி” அரசன் மகள் வாயில் வைத்துப்பேசச் செய்கின்றார். அப்போது அருகில் இருந்த நரிக்கண்ணன் பலதடைகளை முன் வைப்பான்போல் பல வினாக்களை எழுப்புகின்றான். அவற்றில் ஒன்று “இகழ்ச்சாதி ஒப்புவதோ ?” என்பது".பாண்டியன் பரிசை ஒரு தாழ்ந்த சாதிக்காரன் தேடித்தந்தால் அவனை மணக்க முன்வருவாளோ என்பது இதன் கருத்து. அதற்கு அன்னம் உடனே “இவ்வுலகில் எல்லோரும் நிகரே” என்று அடித்துப் 5. இயல் - 44 : 1. பக். 73 7. இயல் - 45 :3- பக்.77 8. இயல் - 40 : 2- பக். 67 9. இயல் - 41 : 1. பக். 68 .ே இயல் - 42 : 3- பக். 70