பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியம் உணர்த்தும் உண்மைகள் 143 பேசுகின்றாள். தான் சாதி அமைப்புக்குச் சாவுமணி அடிப்பவள் என்ற குறிப்பை வெளிப்படையாகவே பெறவைக்கின்றாள். தொடர்ந்து தன் காதலன் வேலனைக் கருத்தில் கொண்டு. கூழையேனுக்கொண்டு காட்டுமேட்டுக் கொல்லையேனும்கற்றித் திரியு மந்த ஏழையேனும்கண்ணுக்கினியான் இன்றேல் இம்மியே னும்வாழ்வை இனியான் வேண்டேன்!" என்கின்றாள். இதனால் இவ்வுலகில் எல்லோரும் நிகரே என்று தன் மாமன் நரிக்கண்ணனிடம் கூறுகின்றாள். நரிக்கண்ணனிடம் அரச சாதியே உயர்ந்தது என்ற கருத்து வேரூன்றியுள்ளது. அரசர்கள் தங்கள் சாதி அமைப்பில் மேல்நிலை பெறவேண்டும் என்று சாதிப் பிரிவுகளைக் களையாது அவற்றை நிலைத்திருக்கச் செய்கின்றனர் என்ற கோட்பாட்டினைப் பாண்டியன் பரிசால் அறிய முடிகின்றது. அன்னம், ஆத்தாள் முதலியவர்களைக் காக்கும் வழியை வேழநாட்டரசன் ஆராயும்போது, வெண்நிலவு முகத்தாளின் எண்ணம் கேட்டு வேற்றுநாட்டிளவரசை மணக்கச் செய்து மேலும்ஒரு தீங்கின்றிக் காக்க வேண்டும்" என்ற அமைச்சன் கூற்றினால் இக்கருத்து வெளியாகின்றது. இக்கருத்தை அடியோடு வெறுப்பவர் நம் கவிஞர். பஞ்சமர் பார்ப்பனர் என்பதெல்லாம் என்ன? பாரதநாட்டின் பழிச்சின்னத்தின் பெயர்" என்ற அவரது வெறுப்பைப் பிரிதோர் இடத்தில் காணலாம். இன்று நம்நாட்டின்நிலை என்ன? எங்கும் சாதிச்சண்டைகள், மலிந்து காணப் பெறுகின்றன. அதுவும் தேர்தல்கள் நடைபெறுங்காலத்தில் இதனை அரசியல்வாதிகள் தூண்டி வளர்க்கின்றனர். இதனை எண்ணியே பாவேந்தர், 11. இயல் - 42:4- பக். 70 12. இயல் - 30:2- பக்.53 13. பாதா.க. தொகுதி-1 பக். 163 ili