பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t44 கதாயின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே!" என்று வீரப்பன் வாயில் வைத்துப் பேசுகின்றார்; சாதி அமைப்பைச் சாடுகின்றார். மூடநம்பிக்கைகளை அகற்றுதல்: சாதி சமயங்களை மட்டிலும் ஒழித்து விட்டால் போதாது; அறிவு வளர்ந்து விடாது. சமயங்களின் அடிப்படையில் உண்டாகிய மூடநம்பிக்கைகளும் ஒழிய வேண்டும். மக்கள் தம் கண்மூடித்தனத்தால் தாம் என்ன சொல்கின்றோம் எதனைச் செய்கின்றோம் என்று தெரியாமலேயே வாழ்கின்றனர். அவர்களின் எழுச்சிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் மூடநம்பிக்கைகள் ஒழிந்தால்தான் விமோசனம் உண்டு. பாவேந்தர் பூதம், பேய், பிசாசு என்ற கருத்துகளைத் தம் காவியத்தில் நுழைத்து நையாண்டி செய்து நகைச்சுவையுடன் ஒழிக்க முயல்கின்றார். இந்த ஒழிப்பைப் பலர்வாயினின்றும் பேச வைக்கின்றார். மக்களிடம் பூதநம்பிக்கை இருப்பதைத் தனக்குச் சாதகமாகக் கொண்டு நரிக்கண்ணன், ஆம்! இதற்கோர் சூழ்ச்சியினை நானு ரைப்பேன் அம்மலையின் இப்போதே பூதம் ஒன்றை நாம்அனுப்பி அஞ்சும்வகை செய்யச் சொல்லி நாடெல்லாம் அந்நிலையைப் பரப்ப வேண்டும் போம்மக்கள் போவதற்கு நடுங்கு வார்கள் போய்த்தேடு வாரெல்லாம் நாமே யாவோம்” என்று திட்டம் திட்டிச் செயற்படுத்துகின்றான். பூதத்தைக் கண்டு மக்கள் வெருண்டோடி அல்லல் படுவதை அற்புதமாக வருணித்து நம்மை நகைக்க வைக்கின்றார். மக்கள் கருத்திலுள்ள பூதம் எங்கும் பூதங்களாக உருவெடுப்பதைக் காண்கின்றனர். முன்நடப்போர் பின்வருவோர் தம்மை எல்லாம் முகம்திரும்பிப் பார்க்குமுனம் பூதம் பூதம் 14. இயல் - 56 : 3 - பக். 39 15. இயல் - 47 : 6 - பக். 83