பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியம் உணர்த்தும் உண்மைகள் t45 என்றலறி எதிர்வருவோர் தமை.அ னைக்க என்செய்வோம் பூதமென அவரும் ஓடி நின்றிருக்கும் குதிரையையோ எதையோ தொட்டு நிலைகலங்கி விழும்போதும் புழுதி துற்ைறி முன்றிலிலே பிள்ளைகளில் கண்கெடுத்து முழுநாட்டின் எழில்கெடுக்க முழக்கம் செய்வார்" வீரப்பனின் தோழன் ஒருவன் வாயில் வைத்து நரிக்கண்ணன் மக்களின் பூதம் பற்றிய மூடநம்பிக்கைகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளுகின்றான் என்பதை விளக்கும் போக்கில் கவிஞர் பேசுகின்றார். அரண்மனையில் யானைவரப், பூதம் என்றே அலறினார் மாவுத்தன் வைக்கோல் வண்டி எருதின்மேல் வீழ்த்தான்! சாய்ந்ததுவைக் கோலும் எழுப்பிவைத்த சாரத்தான் நெளிய உச்சி இருத்தகொல்லுற்றுக்கா ரன்கு தித்தான்! எரியடுப்பால் கூரையும்வைக் கோலும் பற்றித் தெருபற்றி எரிகையிலே பூதம் அங்கே சிரிப்பதென அலறினார் அடுத்த ஊரார்' வீரப்பனின் நண்பன், அஞ்சவைக்கும் பூதத்தை அஞ்சவைக்க அஞ்சாறு பூதத்தை நாம்அனுப்பிக் கொஞ்சிவிளையாடவிட்டால் நல்லதாகும் கூறுகநீர் விடை என்றான்" அதனை வீரப்பன் ஆமோதித்து, “வேண்டுமானால் நிகழ்த்துவோம் நடப்பதெல்லாம் அறியவேண்டும். முள்ளைக் கொண்டு முள்ளை எடுப்பது போன்ற திட்டம்” இது என்கின்றான். மக்களின் பூதம்பற்றிய மூடப் பழக்கத்தை நீலி என்ற கவிதை மாந்தர் வாயில் வைத்தும் கவிஞர் பேசுகின்றார்: 16. இயல் - 49:7-பக். 87 17. இயல் - 56 : 8- பக். 101 18. இயல் - 56:9 - பக். 101