பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 கரணவின் பாண்டியன் பரிசு.ஒரு மதிப்பீஇ முன்வந்த பூதத்தை தரிவி டுத்தான் முதற்பூதம் நடுநடுங்கிச் சாகுமாறு பின்வந்த பூதத்தை இளைய அன்னம் பெற்றெடுத்தாள் என்துரைத்துச்சிரித்தாள் நீலி: என்னபொருள் இதற்கென்று நீலன் கேட்டான் இதன்பொருள்தான் மடமைமேல் வெற்றி என்றான்” மக்களின் இந்த மடமையைப் பயன்படுத்திக் கொண்டுதான் சிலர் ஏய்த்துப் பிழைக்கின்றனர் என்ற கருத்தைக் கவிஞர் இந்தக் காவியத்தில்தோலுரித்துக்காட்டுகின்றார்.மக்களிடம் உற்று உணரும் அறிவும் சிந்திக்கும் ஆற்றலும் இல்லாமையால் அதனை நாம் விலாமுறிய, வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் போக்கில் கவிஞர் நமக்குக் காட்டுவார். நரிக்கண்ணன் விடுத்த பூதத்தைத் தெருவில் பார்த்ததாக ஒருவன் கூறக் கேட்டதும் வேறொருவன் ஒடும் ஒட்டத்தைக் கவிஞர், காலிருந்தும் போதாமல் இறக்கை வேண்டிக் கடிதாக ஓடினான் ஐயோ என்றே!’ என்று சொல்லிச் சிரிக்கின்றார். இன்னும் சிலர், கவனோடும் கல்லைப்போல் விரைந்தா ரேனும் எவ்விடத்தில் போவதென்னும் கருத வில்லை கவலைனரு துகள்போல மக்கள் யாரும் கால்கடுக்க நகர்சுற்றிச் சுற்றி வந்தார்' என்று கூறி மக்களின் மூடநம்பிக்கையின் கொடுமுடியைக் காட்டுகின்றார். பொருளாசை: மிதமிஞ்சிய பொருளாசையால் தூண்டப்பெறும் முதலாளித்துவத் தலைவன் திருடர்களை உண்டாக்குகின்றான் என்றும், பொதுவான விரிவான நல்லறத்தில் நாட்டங் கொண்டவன் திருட்டைக் களைவிக்கின்றான் என்றும் திருடர்கள் பேசிக் கொள்வதுபோலக் கவிஞர் ஒருநிகழ்ச்சியைக் காவியத்தில் ஏற்படுத்தி சமூகவியல் சிந்தனையைத் தூண்ட வைக்கின்றார். 19. இயல் - 68:2- பக். 128 - 20. இயல் - 49: 4- பக். 86 21. இயல் - 49:5- பக் 85