பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியம் உணர்த்தும் உண்மைகள் Y 147 பொருளாளி திருடர்கனை வினைவிக்கின்றான் பொதுவுடைமைபோன்திருட்டைக்களைவிக்கின்றான். ‘மன்னர் பழம்புலவர் வாணிகர்கட் கெல்லாம் வரும்பெயரைதமக்காக்கும் முயற்சி” என்பது அவர்களுடைய பேச்சின் சாரம். இதில் கவிஞர் தம்முடைய பொதுவுடைமைக் கருத்தினை வெளிப்படுத்துவதாகக் கருதலாம். நீலன் பேராசையால் ஆட்கொள்ளப்பட்டுப் பாண்டியன் பரிசைத் தேடவும் வேலனைத் தாக்கவும் துணிகின்றான். பல வீரர்களைத் தூண்டிவிட்டு பேழையுடன் வரும் வேலனைத் தாக்குமாறு பணிக்கின்றான்."ஆசை வெட்கமறியாது” என்பதற்கு இவன் செயல் தக்கதோர் எடுத்துக்காட்டாக அமைகின்றது. இவன் ஏவிவிட்ட ஆட்களின் செயல்கள் நகைப்பிற்கிடமாகுமாறு கவிஞர் படைத்துக் காட்டுவார். எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வேலன் பேழையுடன் வருவதற்கு முன்னமே நீலனுடைய ஆட்கள் அறிவுக்கேடர்களாக இயங்குகின்றனர். ஒருவன் கவரைப் போய்ப் பார்க்குமாறு கூறுவான் பேழையைத் தோளின்மேல் வைத்தபடி நிற்கின்றான். அவனைத் தடுத்திடுமாறு மற்றொருவன் கூற, பின் ஒருவன் அத்தி மரத்தை வாளால் குத்தி நைவான். ஆளா, மரமா ? என்று கூட அவனால் இனம் கண்டு கொள்ளமுடியவில்லை. பண்டைக் காலத்தில் அண்ணல் யானை அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படையொடு தங்க நிழல் கொடுக்கும் ஆலமரத்தின் அடியில் நின்ற கழுதையைத் தொட்டு அதனால் உதைபட்டுக் கீழே வீழ்ந்தான் ஒருவன். வேலமர்த்தை ஆள் என்று மயங்கி நெருங்கியதால் முட்கள் வெடுக்கென்று தைக்க நடுங்கிப்போனான் ஒருவன். காலடி ஓசை எழுப்பாமல் பூனைபோல் நடந்து கற்றுணை மற்போருக்கு அழைக்கலானான் மற்றொருவன். இவ்வளவும் நிலவுகாயும் இரவில் நடைபெற்றன.இருள் சூழ்ந்திருக்கும் இரவில் அம்மறவர்கள் என்ன செய்வார்களோ என்று கவிஞர் வினவும்போது நமக்குச் சிரிப்பை அடக்க முடியாது போகின்றது. 22. இயல்- 17:2,3- பக். 32