பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 * சாவின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு பேழையுள் அடங்கியுள்ள ஆவணத்தில் அமைந்திருப்பதாக அறியக் கிடக்கின்றது. கதிர்நாட்டை நரிக்கண்ணன் ஆளும் ஆட்சி கடுகளவும் சரியாக இராதென்றும், ஆகவே அதனைப் பொது நாட்டம் உடைய ஒருவன் பொறுப்பில் வைக்கவேண்டும் என்ற கருத்தை அமைச்சன் வேழமன்னனுக்கு யோசனை கூற, மன்னன் அன்னத்தின் கருத்தை வினவ அவள் கூறுவாள்; பழதானிற் பாண்டியனின் படைநடத்திப் பகைகொண்ட சோழனையும் வெற்றி கொண்ட அழல்வேலான் என்னருமை மூதாதைக்கே அளித்தான்ஒர் பேழையினைப் பரிசாய்! அந்த எழிலான பேழையிலே ஞாலம் மெச்சும் இழை ஆடை வாள்பலவும் இருக்கும்; மேலும் அழகான கதிர்நாட்டின் வரலாறெல்லாம் அப்பேழை சொல்லிவிடும்’ என்று. மேலும் அந்தப் பேழை மாறாமல் அதனைப் பெற்றுத் தரவேண்டும் என்றும் அரசனை வேண்டுகின்றாள். இன்னும் அந்தப் பேழையின் அடையாளத்தையும் அஃது இருக்கும் இடத்தையும் சுட்டி உரைக்கின்றாள் இளவஞ்சி அன்னம். என் பேழை மன்னவரின் வாளின் நீளம்: உள்அகலம் மூன்னுசாண்! உயரம் நாற்சாண்; ஒளிதிகழும் கிளிச்சிறைப்பொன் தகடு தன்னால் வெளிப்புறமும், பொதிகைமலை சந்தனத்தின் வெண்பலகை உட்புறமும் காணும் மேலே உளிஅழுந்தும் எழுத்தாலே உள்ளிருக்கும். உயர் பொருள்கள் அத்தனைக்கும் பெயர்கள் கானும் வாள், நகைகள் ஆடைவகை முழுநீளத்தில் வைத்திடுபொற் பட்டயம்பே ழைக்கு ளுண்டு! 2. இயல் 31:2-பக், 54