பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் பரிசு வரலாறு Y 3 "கானுகதிர் என்னுரைத்துத் தானணிந்த கழுத்தணியைக் கழற்றியதில் அமைத்திருந்த ஆணிப்பொன் பேழைவதன் அடையாளத்தை அரசருக்கும் படையாட்சி தனக்கும் காட்டிச் சேணுயர்த்த அரண்மனைக்குள் ஆடற் கட்டின் தென்அறையில் அப்பேழை இருக்கும்” என்றாள்.' அரசன் ஆணைப்படி ஆளி என்னும் படைத்தலைவனும் அவன்கீழ் பல வீரரும் தேடுகின்றனர் அரண்மனைக்குள், "ஆத்தாளும் உருமாற்றிக் கொண்டு தக்க படையோடு தேடுகின்றாள்.” கணக்காயன் முதலியோரும் இத்தேடலில் பங்கு கொள்கின்றனர். ஆளி "பேழை கிடைக்கவில்லை” என்று கைவிரிக்கின்றான். எல்லோரும் வருந்துகின்றனர். நாட்டின் உண்மை நிலையை அறிந்த வேழ மன்னன் நரிக் கண்ணனைச் சீறுகின்றான். கதிர்நாட்டு மன்னனைப் பின்னிழுத்து கொல்லல், தங்கையென்றும் பாராது அரசமாதேவியைக் கொலை புரிதல் போன்ற அடாதசெயல்களைச் செய்ததற்கும் கடிகின்றான். அன்னத்தையும் ஆத்தாளையும் தீர்த்துக் கட்ட அவர்களைத் தேடியதும், பாண்டியனார் பரிசைக் களவாடியதும் அவனே என்றும் குற்றப் பத்திரிக்கை வாசிக்கின்றான். உடனே நரிக்கண்ணன் அரசன் காலில் நெடுஞ்சானாக வீழ்ந்து தான் எக்கொலையும் செய்ததில்லை என்றும், பாண்டியன் பரிசுபற்றித் தனக்கு யாதொன்றும் தெரியாதென்றும் நீலிக்கண்ணிர் வடித்து, வேறொரு கருத்தைக் கூறி அரசனைத் திசை திருப்புகின்றான். அன்னம் முறை மாப்பிள்ளையாகிய தன்மகனை மணந்து கொண்டு கதிர்நாட்டை ஆளட்டும் என்று கொஞ்சும் பாவனையில் கெஞ்சவே,"எவரெதனைச் சொன்னாலும் "ஆம், ஆம்” என்றே இயம்புகின்ற இயல்புடைய வேழமன்னன்” இதனையும் நல்ல முடிவு என ஒப்பி அன்னத்தின் கருத்தை வினவ, அவளும், 3. இயல் 33: 1, 2- பக். 56