பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爵 * காவின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு ஒருத்தன்னை மனப்பதெனில் அன்னோன், என்நன் உயர்பேழை தனைத்தேடித் தருதல் வேண்டும்" என்ற நிபந்தனையைப் போடுகின்றாள். தொடர்ந்து, முன்பாண்டி வையத்தில் முறைந டாத்தி முத்தாண்டான் எனும்பெயரை நிலைநிறுத்தும் தென்பாண்டி நாட்டான்பால் என்மூதாதை சிறைச்சோழனைவென்று பெற்ற தான என்.பாண்டி யன்பரிசை எனக்க ளிப்போன் எவனெனினும் அவனுக்கே உரியோள் ஆவேன்’ என்று கூறிய அன்னத்தின் வாக்கு இதனைத் திசை திருப்புகின்றது. அன்னத்தின் மூதாதையரில் ஒருவன் முத்தாண்டான் என்ற தென் பாண்டிநாட்டு அரசனுக்காகச் சோழமன்னனை வென்றதற்குப் பரிசாக கதிர்நாடுபட்டயமாக (ஆவணமாக வழங்கப்பெற்றது என்றும் அதனை அடிப்படையாகக் கொண்டுதான் கதிரைவேல் (அன்னத்தின் தந்தை) கதிர்நாட்டை ஆட்சி புரிந்து வந்தான் என்றும் கூறிய அன்னத்தின் பேச்சு உறுதிப்படுத்துகின்றது. வேழ நாட்டரசனும் இதனை ஒப்புக் கொள்ளுகின்றான். களவு போன பாண்டியன் பரிசு அடங்கிய பேழையைத் தேடுமாறு கதிர்நாட்டின் தெருக்கள்தோறும் முரசறைந்து அறிவிக்கப் பெறுகின்றது. "அன்னம் என்னும் கதிரைவேல் மன்னன்மகள் இழந்து போன கவின்பாண்டி யன்பரிசைத் தேடித் தந்தால் அதுபோதே அவனையோ அவள்கு றிக்கும் ஆனனையே அவள்மனப்பாள் தேடுவோர்க்கும் எதிர்ப்பில்லை எவராலும் இடரும் இல்லை இதுவேழ மன்னவனார் ஆணை” என்பது முரசறிவிப்பு. 4. இயல் 40:2-பக். 87 5. இயல் 41:1. பக், 88 .ே இயல் 43:1. பக்.72