பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் பரிசு வரலாறு Y 5 இச்செய்தியைச் செவிமடுத்தவர் அனைவரும் ஆலமரத்தடி யிலும், தோப்பினுள்ளும், கிணற்றினுள்ளும் இன்னும் கண்ட கண்ட இடங்களிலும் பரிசினைத் தேடி அலைகின்றனர். தென் மலைக்குள் இருக்கும் கள்ளர் அதனைக் கைப்பற்றியிருக்கக் கூடுமென்றும் கருதுகின்றனர். ஆனால் அங்குப் போக அஞ்சுகின்றனர். ஆயினும் அங்குச் சென்று யாரும் பேழையினை அடையாதிருக்க நரிக்கண்ணன் பூதத்திட்டத்திற்கு வழி வகுக்கின்றான் அமைச்சனிடம், ஆம்! இதற்கோர் சூழ்ச்சியினை நானு ரைப்பேன். அம்மலையில் இப்போதே பூதம் ஒன்றை நாம்அனுப்பி அஞ்சும்வகை செய்யச் சொல்லி நாடெல்லாம் அந்நிலையைப் பரப்ப வேண்டும். போம்மக்கள் போவதற்கு நடுங்கு வார்கள் போய்த்தேடு வாரெல்லாம் நாமே யாவோம் நீமாறு பேசாமல் இதனைச் செய்க நெடும்பேழை கிட்டும்’ என்று கூறுகின்றான். பாண்டியன் பரிசு மக்கள் கையில் கிடைத்து விட்டால் தனக்கு அரச வாழ்வு நிலைபெறாது என்று எண்ணிய நரிக்கண்ணன் இவ்வாறு வஞ்சகச் செயலில் ஈடுபடுகின்றான். நரிக்கண்ணன் எதிர்பார்த்தவாறே பூதச் சதி பேருருக்கொண்டு மக்களுக்கு அச்சத்தை விளைவிக்கின்றது. பரிசினைத் தேடும் மக்கள் நாலாயக்கமும் சிதறியோடுகின்றனர். இலக்கின்றிக் கவலை மாடுகள் போல் கால்கடுக்க நகரைச் சுற்றிச் சுற்றி வருகின்றனர். நரிக்கண்ணன் பரப்பிய யூதச் சூழ்ச்சியை எதிர்க்கும் துணிவின்றி மக்கள் கோழைகளாகத் திரிகின்றனர்; அஞ்சி அஞ்சிச் சாகின்றனர். நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி மானத்தைச் சிறிதாக மதித்து வாழ்வு பெரிதென்றெண்ணியிருக்கும் பரிதாப நிலையைக் கவிஞர் அற்புதமாகப் புலப்படுத்தி விடுகின்றார். 7. இயல் 47; 6 - பக். 83