பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 காவின் பாண்டியன் பரிசு.ஒரு மதிப்பீஇ தொன்மைஎனும் உச்சியிலே அறிவால் வாழ்ந்த பொன்னகத்தில் தமிழகத்தில் தாயகத்தில் பூதம்எனும் சொல்துழைதல் புதுமை’ என்று நீலனின் வாய்மொழியாகப் பேசி உள்ளம் குமுறுகின்றார். தாழ்வுற்ற கதிர்நாட்டின் வீரவுணர்வு புத்துயிர் பெறத் தொடங்குகின்றது. ஞானக் கதிரவன்போல் திகழும் கணக்காயரிடம் கலையின்ற வீரப்பன்-ஆத்தாள் பெற்றெடுத்த வேலன் எழுஞாயிறு போல் உதயசூரியன் போல் - கிளர்ந்தெழுகின்றான். நரிக்கண்ணனின் வெளிப்பகை, பாண்டியன் பரிசை அடைய அவன் தொடர்ந்து செய்துவரும் தில்லுமுல்லுகள், பூதச் சூழ்ச்சி, இவற்றையும் உட்பகைகளாகத் தோன்றிச் செயற்படும். நீலனின் அருஞ்சூழ்ச்சிகள், அடுத்துக் கெடுக்கும் செயல்கள் ஆகியவற்றையெல்லாம் ஏற்ற வகைகளில் வென்று பாண்டியன் பரிசினைப் பெற்றுத் தருகின்றான். அன்னத்திற்கும் வேலனுக்கும் பலரும் விரும்பியவாறு திருமணம் நடைபெறுகின்றது. கதிர்நாட்டு ஆட்சிப் பொறுப்பும் அவர்களை வந்தடைகின்றது. தொடக்கம் முதல் இறுதி வரையிலும் “பாண்டியன் பரிசு’ நிலைக்களனாக அமைந்து காவிய நிகழ்ச்சிகள் தொடர்பு படுத்தப் பெற்று காவியம் நடைபெறுவதால் இக்காவியம் “பாண்டியன் பரிசு’ என்று கவிஞரால் பெயர் சூட்டப் பெற்றிருப்பது சாலப் பொருத்தமாகின்றது. இந்த உருவகப் பெயரும் சிறப்புப் பெற்றுத் திகழ்கின்றது. சிலம்பு காரணமாக எழுந்த நிகழ்ச்சிகள் சிலப்பதிகாரமாகவே உருப்பெற்றுப் பெயர் சூட்டப் பெற்ற வரலாற்றையும் ஈண்டு நினைவு கூரச் செய்கின்றது. சி. இயல் 57 , 15 பக். 107