பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 * காவின் பாண்டியன் பரிசு - ஒரு மதிப்பீடு 1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் இது காவிய பாவனையில் எழுதப்பெற்ற ஒர் அற்புதப் படைப்பு கவிஞர் தம் கொள்கைகளை விளக்கும் போக்கில் வேகமாக எழுதப்பெற்ற ஒரு கற்பனை ஓவியம். பாவேந்தரின் கவிதை ஆற்றலின் ஆவேசத்திற்கும் குணங்களுக்கும் இக்கவிதை சிறந்ததோர் எடுத்துக்காட்டு, குப்பன் ஒரு தமிழ் இளைஞன். இவன் ‘சஞ்சீவி பர்வதம்’ எனப் பெயர்கொண்ட மலையில் தன் காதலி வஞ்சியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றான். வஞ்சி "இட்ட அடி நோக எடுத்தஅடி கொப்பளிக்க வருகின்றாள். குப்பன் அவளைத் தழுவச் செல்லுகின்றான். வஞ்சி அவனைத் தடுத்து மலை மீதேறி இரண்டு மூலிகைகளைக் கொண்டு வந்தால்தான் அவனது விருப்பம் நிறைவேற்றப்படும் என்கின்றாள். குப்பன் ஒடோடிப்போய் மூலிகைகளைக் கொணர்கின்றான். ஒரு மூலிகையை அவர்கள் தின்கின்றனர். மற்றவர்கள் பேசும் பேச்சைக் கேட்கும் ஆற்றல் பெறுகின்றனர். வஞ்சி, ஆங்கிலேயன் ஒருவன் இந்திய நாட்டின் நிலைமையைப் பற்றிப் பேசுவதைக் கேட்கின்றாள். சிந்தனை கொள்கின்றாள். மூலிகையைக் கொண்டுவந்த மகிழ்ச்சியில் குப்பன் அவளை முத்தம் தருவதற்குப் போகையில் அங்கு ஆரவாரத்துடன் எழுந்த ஒரு பேரொலி அவனைத் திடுக்கிடச் செய்கின்றது. ஒரு பாகவதர் இராமாயணக் கதையில் ஆஞ்சனேயர் சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கிக்கொண்டு போகும் கட்டத்தைப் பற்றிச் சொற்பொழிவு செய்து கொண்டிருக்கும் ஒலி அது. குப்பன் தான் நின்றுகொண்டிருக்கும் சஞ்சீவி மலைக்குத்தான் ஆபத்து வந்ததென்று வருத்தமுற்று நடுநடுங்குகின்றான். இப்பொழுது மற்றொரு மூலிகையை அவர்கள் தின்கின்றனர். இதனால் பிற இடங்களில் நடைபெறும் காட்சிகளை நேரில் காணும் ஆற்றலைப் பெறுகின்றனர். ஓரிடத்தில் இராமாயணக் காலட்சேபம்" நடந்து கொண்டிருக்கின்றதை அவர்கள் காண்கின்றனர். வஞ்சி இராமாயணக் கதையில் சஞ்சீவி மலை அநுமாரால் து.ாக்கப் பெற்றதே ஒழிய தாம் இருக்கும் மலைக்கு ஆபத்து ஒன்றும் இல்லை என்று