பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தரின்காவியங்கள் Y § அவனுக்கு மெய்ப்பித்து அவனது மூடத் தனத்தைப் பரிகாசம் செய்கின்றாள். குப்பனுக்கு ஞானோதயம் ஆகின்றது. இதுதான் கவிதையில் கவிஞர் படைத்துக் காட்டிய கற்பனை. கற்பனை ஓவியம்: பொதுவாக கவிதை மிக்க ஆற்றலுடன் வரையப் பெற்றுள்ளது. ஆனால், செம்மையான கட்டுடனும் ஒசை வளத்துடனும் நடையழகுடனும் அமைவதில் ஒரு குறைபாடு தோன்றுகின்றது. இவற்றைக் கவிஞர் தம்முடைய கொள்கை வேகத்திற்கும் ஆவேசத்திற்கும் அர்ப்பணம் செய்து விட்டதாகக் கருத முடிகின்றது. இதில் நல்ல இலக்கியச் சுவையுடைய சொற்கள், கொச்சைச் சொற்கள் ஆகியவை தங்குதடையின்றிச் சேர்ந்து கலந்து காதல்மணம் புரிந்து ஒருவித ஆற்றலைப் பெறுகின்றன. கவிஞர் தம்முடைய இலட்சியங்களையும் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் கேட்போர், படிப்போர் மனத்தில் விதைக்க வேண்டும் என்று ஆவேசத்துடன் இருப்பதால் அந்தக் குறிக்கோள் நிறைவு பெறுமாறு கவிதை அமைந்துள்ளது. கவிதையின் அழகு சிறிது குறைவதாகக் காணப்பெற்றாலும் தெளிவு கைவிடப் பெறவில்லை. இக்காரணம்பற்றியே கவிதையில் நடையும் பாவனையும் சில இடங்களில் உரை நடையைத் தழுவிச் செல்கின்றன. கவிஞரின் கொள்கைகள்: ஆங்கிலேயன் பேச்சில்வெளிப்படுவன. 1. இந்திய மக்களின் தொகை 33 கோடி'; அவர்களிடையேயுள்ள வேற்றுமைகளும் அந்த அளவே. ஆதலால் அவர்கள் ஒன்று சேர்ந்து நம்மை எதிர்க்க முடியாது. 2. புராணங்கள் இந்த வேற்றுமையை வளர்க்கின்றன; சாதி சண்டைகளை இதிகாசங்கள் வளர்க்கின்றன. 3. சமூகத்தின் கண்ணைக் குருடாக்கி வளமாக வாழும் குருக்களோ கணக்கற்றவர்கள். 4. உதட்டில் வெல்லத்தையும் உள்ளத்தில் கள்ளத்தையும் உடைய வான்சுரரைவிட்டு வந்த பூசுரர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். 9. இப்போது হেল্য - 102 கோடி