பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 காவின் பாண்டியன் பரிசு.இ 5. மக்களிடம் சிந்தனையாற்றல் சிறிதுமில்லை; தம்தோள் உழைப்பினிலும் நம்பிக்கை இல்லை. 8. பகுத்தறிவே இல்லாமல் ஒழித்துவிட்டு, விரதம், நோன்பு போன்ற கற்பனைக் கருத்துகளுக்கு இடங்கொடுத்து உணவு உண்ணாமல் சத்துடம்பைக் குன்றவைக்கும் மக்கள் வாழ்கின்றனர். 7. பொறுப்புள்ள மக்கள் கற்களாக்கப்பெற்று கற்கள் கடவுளர்களாக காணப்படுகின்றன. 3. “காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா’ என்றும் உறவினர் யாவரும் இல்லாதொழிந்து விடுவர் என்றும் போகங்கள் வேண்டா, பொருள் வேண்டா, “பாழுலகம் பொய்; மெய்யான பரமபதம் செல்க' என்றும் துவலும் சாக்குருவி வேதாந்தத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் மக்கள். 9. சாதிப் பிரிவு, சமயப் பிரிவு, நீதிப் பிழைகள், நியமப் பிழைகள், மூடப் பழக்கங்கள் முதலியவை யாவும் ஒழிந்தால் ஆங்கிலேயர்கள் தாமாக ஓடிவிடுவர். 10. இராமாயணம் என்னும் நலிவுதருங் கதை அங்கு உண்டு. குப்பனும் அவள் காதலி வஞ்சியும் “இராமாயணக் காலட்சேபம்” நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் காண்கின்றனர். இங்ஙனம் கவிஞர் தம் கொள்கைகளை இந்தச் சிறுகாவியத்தில் வெளியிடுகின்றார். 2. புரட்சிக் கவி அமுதவல்லி ஒர் அரசனின் மகள் - “ஆசைக்கொரு பெண்”. தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், இலக்கணம் நன்கு பயின்றவள். அயல் மொழியிலும் நன்கு தேர்ச்சி பெற்றாள். கவிதை புனையக் கற்கவில்லை. அமைச்சனிடம் செய்யுள் இலக்கணம் கற்பிக்கும் ஆசான் ஒருவனைத் தேடித்தரும்படி சொல்லுகின்றான் அரசன். அமைச்சனும் உடனே சகலகலை வல்லவனும், உலகோர் போற்றும்