பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தரின்காவியங்கள் 11 புலவனும் உயர்கவிஞனுமான உதாரனைப் பரிந்துரைக்கின்றான். அவன் இளவயதும் அழகும் வாய்ந்தவனாக இருப்பதால் குலமகளை அவன்பால் கற்க விடுவதால் குறைவந்து நேர்ந்தாலும் நேரக்கூடும் என்றும் கூறியவன் அந்தக் குறையைத் தீர்க்கத்தக்கதோர் வழியையும் சாற்றுகின்றான். அமுதவல்லி உதாரனிடம் கற்கும்போது இருவரும் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ளாதிருக்கத் திரையிட்டு, உதாரன் பார்வையற்ற குருடன் என்று அமுதவல்லிக்கும், அமுதவல்லி தொழு(குட்ட) நோயாளி என்று உதாரனுக்கும் சொல்லி வைத்தால் நடைமுறை நன்றாக அமையும் என்று யோசனை கூறுகின்றான். அரசனும் அமைச்சனின் அற்புதமான யோசனையை ஏற்று அமுதவல்லியை அவ்வாறே கற்க ஏற்பாடு செய்கின்றான். அமுதவல்லி தமிழ் கற்க ஒரு பொன்மேடை அமைக்கப் பெறுகின்றது. இருவரும் ஒருவரையொருவர் நோக்காமல் திரையும் இடப் பெறுகின்றது. யாப்பு முறை, அணிநலன், பாப்புனையும் அநுபவ முறை போன்றவை விளக்கமாகப் புகட்டப் பெறுகின்றன. ஆசுகவி, சித்திர கவி, மதுரகவி, வித்தார கவி முறைகளெல்லாம் கற்று வருகின்றாள் அமுதவல்லி. நாட்கள் பல உருண்டோடுகின்றன. ஆனால் ஒருவரையொருவர் பார்க்க முடியவில்லை. விழியற்றவனைப் பார்த்தல் அபசகுனம் என்று அமுதவல்லி உதாரனைப் பார்க்கவில்லை. உற்றதோர் நோயுடையாள் என்று உதாரனும் அவளை நோக்க வில்லை. - ஒருநாள், அமுதவல்லி பொன்மேடையருகில் காத்திருக்கின்றாள் இளவேனிற்காலம். இருட்காட்டை அழிப்பது போல விண்வெளி அனைத்தையும் கவரும் வண்ணம் பால் மதிய ஒளி வீசுகின்றது. உதாரன் பொன்மேடையருகில் நின்று கொண்டு முழுமதியை இமையாது நோக்குகின்றான்;இருவிழியால் தழுவுகின்றான்; அதனை மனத்தாலும் உண்கின்றான். கலைமகள் அருள்பாலிக்கின்றாள். கவிதை மழை பெய்யத் தொடங்குகின்றது. அது வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஒடி அமுதவல்லியின் செவிகட்கு அமுதமாக இனிக்கின்றது. .