பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சுராவின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு அமுதவல்லியின் சிந்தனையாற்றல் செயற்படுகின்றது. "உதாரன் விழியற்றவனாயின் நிலவினை எங்ங்ணம் காணமுடியும்? பாடமுடியும்!” என்று எண்ணுகின்றாள். ஒடிச்சென்று அவனது தாமரைக் கண்களையும் தடந்திருத்தோள்களையும் காண்கின்றாள். அவனது எழில் திருமேனியில் உள்ளத்தைப் பறிகொடுத்து நிற்கின்றாள். உதாரனும் தன்னருகில் நிற்கும் அழகிய மங்கையைக் கண்டு, "மின்னின குலத்தில் விளைந்ததோ? வானவில்லினின்றும் உருப்பெற்றதோ? தண்டமிழ்க்கவிவாணரின் கற்பனையில் விளைந்த பொற்சித்திரமோ? பூங்கொடியோ?” என்றெல்லாம் எண்ணி இறுதியில் தான் கற்பிக்கும் அமுதவல்லி என்பதாக அறிகின்றான். அமைச்சன், அரசன் ஆகியோரின் சூழ்ச்சி பட்டவர்த்தனமாக வெட்ட வெளிச்சமாகின்றது. அமுதவல்லி-உதாரன் இருவர்களிடையே காதற் பேச்சுகள் நடைபெறுகின்றன. அப்போது உதாரன், காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ? கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ? பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மை யாமோ? பிறர்சூழ்ச்சி செந்தமிழை அழிப்பதுண்டோ? நேர்இருத்தித் தீர்ப்புரைத்துச் சிறையிற் போட்டால் நிறைதொழிலாளர்களுணர்வு மறைந்து போமோ? சீரழகே தீந்தமிழே:உனைஎன் கண்ணைத் திறையிட்டு மறைத்தார்கள் என்று சொன்னான். இதற்குமேல் தொடரும் பேச்சுகள் பஃறொடை வெண்பாவால் அற்புதமாக அமைக்கப்பெற்றுள்ளன. சொல்நயம், பொருள்நயம், உவமையழகு பொருந்திய இப்பகுதி பன்முறை படித்து அநுபவிக்கத் தக்கது. காதலர் விரைந்தோடி ஒருவரையொருவர் தழுவி மகிழ்கின்றனர். இன்ப உலகில் நாட்கள் பல உருண்டோடுகின்றன. அமுதவல்லியின் உடல் மாற்றத்தைக் கண்டு தோழியர்கள் தம் ஐயத்தை - உதாரன் - அமுதவல்லி இவர்களின் காதற் குளியலை - அரசனிடம் "விண்ணப்பம்" சாதிக்கின்றனர். அரசன் இவர்கள்