பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கரகவின் பாண்டியன் பரிசு:இ அரசன் துடிதுடித்து, சபையை நோக்கி “அவையோரே, பிழை புரிந்தால் நான் சகியேன். உதாரனையும் அமுதவல்லியையும் மண்மீதில் கிடத்திக் கொல்வதே முறை என்று கூறி, கொலையாளர்களை நோக்கி,"கொலைசெய்வீர்கள்!கடிது செய்வீர்! இஃது என் ஆணை" என்கின்றான். அவையினில் பேச்சும் இல்லை; அசைவும் இல்லை. அச்சடித்த பதுமைகள்போல் இருக்கின்றனர். காதலனை நோக்கி, "என் காதல் துரையே, எவையும் நமைப் பிரிக்கவில்லை. இன்பம் கண்டோம். இறப்பதிலும் ஒன்றுபட்டோம். அநீதி இழைத்த அரசனுக்கு நாட்டுமக்கள் நற்பாடம் கற்பிப்பர்” என்று சொல்லிக்கொண்டு காதலர்கள் இருவரும் கொலை தண்டனை நிறைவேற்றப்பெறும் இடம் நோக்கிச் செல்லுகின்றனர். கொலைக்களக் காட்சி இது. ஒருபக்கம் கொலைஞர்கள் அதிகாரங்கள் கொண்டவர்கள், காதலர்கள் நிற்கின்றனர். எதிர்ப்பக்கத்தில் நாட்டுமக்கள் அனைவரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு அலைகடல்போல் திரண்டுள்ளனர். தண்டனைக்கு உட்பட்டவர்கள் இருவரும் இறுதியாகச் சிலவற்றைப் பேசலாம் என்று தலைப்பாகை அதிகாரி விடை தருகின்றான். தமிழ்க்கவிஞன் மக்களிடையே முழக்கம் செய்கின்றான்." "பேரன்பு கொண்டவரே, பெரியோரே, என் பெற்ற தாய்மாரே, நல் இளஞ்சிங்கங்காள்!” என்று கூடியிருந்த மக்களை விளித்து, "அந்தக் காலத்தில் பாம்புக் கூட்டம் போராடும் பாழ்நிலத்தை அழகுநகர் உண்டாக்கிப் புதுக்கியவர் யார் ? வரப்பெடுத்த வயல்களை உழுதுழுது பயன் விளைக்கச் செய்தவர்கள் யார்? கற்பிளந்து క్షక பிளந்து கனிகள் வெட்டிக்கருவியெல்லாம் செய்து தந்த கைதான் எவர் கை? கடலில் மூழ்கி முத்தெடுத்த மூச்சு எவரின் மூச்சு? அக்கால உலகிருட்டைத் தலைகீழாக்கி அழகியதாய்ச் செய்தவர் யார்? பொழுதுதோறும் புனலுக்கும், அனலுக்கும், சேற்றினுக்கும், கக்கும் 鬣 இவனது இறுதிப் பேச்சு செகப்பிரியரின் "ஜூலியஸ் சீசர்” என்ற நாடகத்தில் அந்தோனி என்ற கதைமாந்தர் பேசியபேச்சையொத்திருந்தது என்று சொல்லி வைக்கலாம்.