பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தரின்காவியங்கள் 15 விஷப்பாம்பினுக்கும், இடையறா நோய்களுக்கும் பலியாகிக் கால் கைகள் உடல்கள் சிந்தும் பச்சைரத்தம் பரிமாறி இந்த நாட்டைச் சலியாத வருவாயும் உடையதாகத் தந்ததெவர்? "அவர்களின் இன்றைய நிலை என்ன? எலியாக, முயலாக இருக்கின்றார்கள். ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோன் புலி வேஷம் போடுகின்றானே! அது போகட்டும். அரசனுக்கும் எனக்கும் ஒரு வழக்கு உண்டாயிற்று. அதனைப் பொதுமக்கள் தீர்ப்பதுதான் சரி என்றேன். மன்னன் ஒப்புக்கொள்ளவில்லை. இவளும் (அமுதவல்லியைச் சுட்டிக் காட்டி) நானும் சாவதென்றே தீர்ப்பளித்தான்; சாவதற்கு வந்திருக்கின்றோம். ஒன்றை நீங்கள் சிந்திக்க வேண்டும். ஒரு மனிதன் தேவைக்கே இந்த தேசம் உண்டென்றால், அந்த தேசம் ஒழிதல் நன்றாம்! நாங்கள் இதோ சாகின்றோம்.நாளை நீங்கள் இருப்பது மெய் என்றுஇருக்கின்றீர்கள்! 'அரசன் தன் மகளுக்கு கவிதை கற்றுத் தரச் சொன்னான்; சொல்லித் தந்தேன். அவ்வாறு கற்றல் நடைபெறுங் காலத்தில் அந்த எழில் நங்கையும் எனைக் காதல் எந்திரத்தால் புலன் மாற்றிப் போட்டுவிட்டாள்; ஒப்பிவிட்டேன்! பெரியோர்களே, இப்போது என் உயிருக்காக நான் அழவில்லை. எழுதாத ஒவியம்போல் உள்ள இவளுடைய உடல் வெட்டப்படும் மாபழிக்கு இரங்குகின்றேன். என் மனமும் நடுக்கம் கொள்கின்றது. அமுதென்று சொல்லுகின்ற இந்தத் தமிழ் என் ஆவி அழிவதற்குக் காரணம் ஆயிற்று என்று சமுதாயம் நினைத்திடுமோ! தாய்மொழிக்கு வந்த பழியை யார் சகிப்பார் ? இன்னொன்று சொல்லுகின்றேன். கவனமாகக் கேளுங்கள். சரியாகச் சிந்தியுங்கள். அரசனுக்குப்பின் இந்தத் தூயநாட்டை ஆளுதற்குப் பிறந்த ஒரு பெண்ணைக் கொல்ல அதிகாரம் அரசனுக்கோ ? உங்களுக்கோ? அரசன் சட்டத்தை அவமதித்தான்! "அரசன் மகள் குடிகட்கு ஆளுரிமையைப் பொதுவாக்க நினைத்திருந்தாள். இப்போது சாகப் போகின்றாள். அவளைக் காப்பீர்! வாழிய என் நன்னாடு பொன்னாடாக! வாழியநற்பெருமக்கள் உரிமை வாய்ந்தே. விழியபோய் மண்ணிரிடையே விண்iழ் கொள்ளி வீழ்வதுபோல் தனித்தாளும் கொடிய ஆட்சி! பெரியோர்களே, 3