பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 காவின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு ஏழையினேன் கடைசி முறை வணக்கம் செய்தேன்! அன்னையிர், எகுகின்றேன்! ஆழ்க என்றன் குருதியெல்லாம் அன்பு நாட்டில்! ஆழ்க!” இவ்வாறு சொல்லிக் கொண்டு கத்தியின்கீழ்த் தலைகுனிந்தான். இப்போது படிகத்தைப் பாலாபிஷேகம் செய்து பார்ப்பதுபோல் அமுதவல்லியின் கண்ணிர் வெள்ளம் அடிசோர்தல் கண்டார்கள் அங்கிருந்த பெருமக்கள். "ஆவென்று கதறினாள் ” "அன்பு செய்தோர் படிமீது வாழாரோ?” என்று பதைபதைத்தாள். இதனைச் செவிமடுத்த நாட்டுமக்கள் “கொடிது” என்றார்கள். கொடுவாளைப் பறித்தார்கள். அந்தக் கொலையாளர் உயிர்தப்பி ஒடலானார்கள் ! கவிஞனுக்கும் காதலிக்கும் மீட்சி தந்தார்கள். இனி புவியாட்சி அரசனுக்கு இல்லை என்று தூது போக்கினார்கள். செல்வம் எல்லாம் உரிமை எல்லாம் நாட்டாருக்கு ஆயிற்று. இவையெல்லாம் நவையன்றி எய்துதற்குச் சட்டம் செய்தனர். நாட்டில் நலிவில்லை. நலமெல்லாம் வாய்த்தது. கோனாட்சி ஒழிந்து குடியாட்சி ஏற்பட்டது. கொள்கைகள்: இக்காவியத்தால் வெளிப்படும் கொள்கைகள் 1. தமிழின் பெருமை பேசப்பெறுகின்றது. 2. சாதி வேற்றுமை இல்லையென்று சாற்றப்பெறுகின்றது. 3. உண்மையான காதலுக்கு மதிப்பு தரப்பெறுகின்றது. 4. தொழிலாளர் ஏற்றம் காட்டப் பெறுகின்றது. 5. முடியரசின் கொடுமை முரசறையப் படுகின்றது. 5. குடியரசு நிலைநாட்டப் பெறுகின்றது. எங்கும் புரட்சி, எதிலும் புரட்சி என்று காண்பதால் காவியமும் "புரட்சிக் கவி’ என்ற திருநாமம் பெறுகின்றது. 3. எதிர்பாராத முத்தம் வள்ளியூர் மறைநாய்க்கன் மகள் பூங்கோதை, மானநாய்க்கன் மகன் பொன்முடி இரு குடும்பங்களும் நெருங்கிய உறவுடையவை. மாமன் மைத்துனன் முறையுள்ளவை. பூங்கோதையும் பொன்முடியும்