பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தரின்காவியங்கள் ?? சிறுவயது முதற்கொண்டே நெருங்கிப் பழகி வந்தனர் - “சென்ற ஆண்டு வரை” இவர்கள் இருவரும், வாய்க்காத பண்டமில்லை உண்ணும் போது மனம்வேறு பட்டதில்லை என்ன ஆட்டம்: அத்தான்னன் றழைக்காத நேர முண்டா! அத்தைமகளைப்பிரிவானாஅப் பின்ளை" இப்படியிருக்க குடும்பப் பகை எப்படியோ நேரிடுகின்றது. பல்லாண்டுகள் பூங்கோதையும் பொன்முடியும் ஒருவரையொருவர் பார்க்கவில்லை. ஒருநாள் இவர்கள் “ஊழ் கூட்டுவிப்பதால் சந்திக்க நேரிடுகின்றது. பருவவளர்ச்சியால் காதல் முதிர்ச்சியடைகின்றது. பெற்றோர் காணாவண்ணம், சந்திப்புகள் நேரிடுகின்றன. 'குறியிடங்களை” அமைத்துக்கொண்டு சந்திப்புகள் நடைபெறுகின்றன. அவ்வூர்ப் பண்டாரம் - நுணுக்கம் அறியா சணப்பன் - சந்திப்புகட்குத் தூதுவனாகச் செயற்படுகின்றான் கைக்கூலி வாங்கிக்கொண்டு. ஒருநாள் நள்ளிரவில் “கிள்ளையைச் சந்திக்கின்றான்”, “மாரோடனைத்து, மணற்கிழங்காய்க் கன்னத்தில் வேரோடு முத்தம் பறிக்கும்போது” மறைநாய்க்கனால் பிடிபடுகின்றான். பொன்முடி புன்னைமரத்தில் கட்டப் பெற்று நீட்டுமிலாரால் நன்றாகப் புடைக்கப் பெறுகின்றான். மகள் பூங்கோதை அடிக்க வேண்டா என்று கொஞ்சும் பாவனையில் கெஞ்சுகின்றாள். தந்தை அவளைத் தள்ளி உதைக்கின்றான். செல்வியை வீட்டிற்கு இட்டுச் செல்லுகின்றனர்; பொன்முடியைக் கட்டவிழ்த்து விட, அவன் உலராத காயங்களோடு வீடு நோக்கி நடக்கின்றான். பொன்முடி-பூங்கோதையின் நினைவாக மறைநாய்க்கன் வாணிகத்தைச் சரியாகக் கவனிக்கவில்லை. பொன்முடி புன்னைமரத்தில் கட்டப்பெற்று அடிபட்ட செய்தியும் பொன்னன் என்பவன் மூலம் பெற்றோர்கட்கு எட்டுகின்றது. இருவரும் 11. எ.பா.மு. 3-பக்.9 12. எ.பா.மு. 6 - பக். 19