பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 காவின் பாண்டியன் பரிசு.ஒரு மதிப்பீஇ வருந்துகின்றனர். பூங்கோதையை ஒருவாறு மறந்திருக்கட்டும், துாற்றப்படும் அலரும் அடங்கட்டும் என்ற எண்ணத்துடன் மானநாய்க்கன் பொன்முடியை வணிகர் கூட்டத்துடன் வாணிகநிமித்தம் வடநாட்டிற்கு அனுப்பிவைக்கின்றான். பொன்முடியோ மீண்டும் மீ ண்டும் கடைவிழியால் மாடியிலே கனிந்திருக்கும் கனிதன்னைப் பார்த்துப் பார்த்து அகல்கின்றான். பாவையோ, உடைந்து விழுவாள், எழுவாள் அழுவாள் கூவி! “உயிரேநீர் பிரித்திரா?” என்று சோர்வாள்!" தன் காதலன் டில்லி மாநகர் நோக்கிச் சென்றதாக அறிகின்றாள் பூங்கோதை நினைந்து தினைந்து துடிக்கின்றாள். தன் காதலனை நாடிச் செல்வதென்று முடிவு செய்கின்றாள். அவனைக் காணும்வரை தனது உயிர்நிலைக்க வேண்டுமே என மனம் கவல்கின்றாள். தாய்வயிற்றி னின்றுவந்த மானின் கன்று தள்ளாடும்; விழும்; எழும்; பின்னிற்கும்; சாயும். துய்விசைப் பூங்கோதைஅவ்வாறானாள்" ாய் விரித்துத் தன் அறையிற் கிடக்கின்றாள். அவள் எதிரிலுள்ள கூடத்தில் நாய் குலைப்பது போலவும் கழுதைகள் நாவறளக் கத்துதல் போலவும் அவதூறு பேசுகின்றனர். அவன் தாய் தன்மகளின் காதலனை நடத்தை கெட்டவன் என்கின்றாள். வடநாட்டுப் பயணம் அவனுக்குத் தாங்காது என்று மகிழ்ச்சி கொள்ளுகின்றாள். தந்தையோ சினத்துடனும் சிரிப்புடனும் வடக்கென்றால் சாக்காடு மாளட்டும்" என்றுரைக்கின்றான். இவ்வுரைகள், பூங்கோதையின் காதில் வெள்ளியம் காய்ச்சி வெடுக்கென ஊற்றியதுபோல் உணர்கின்றாள். தொண்ணுாறு நாட்கள் இவ்வாறு துன்பத்தில் கழிகின்றன. ஒருநாள் தன் தோட்டத்திலுள்ள புன்னையைக் காண்கின்றாள். 13. எ.பா.மு.14 - பக். 43 14. எப.மு. 5-பக் 45