பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தரின்காவியங்கள் 19 பழைய நிகழ்ச்சி நினைவுக்கு வருகின்றது. புன்னையில் அவளுடம்பு புதைகின்றது. உணர்ச்சியின்றிக் கிடக்கின்றது. பொன்னன் என்பான் மூலம் இதையறிந்த தாய்தந்தையர்கள் அருவிநீர் கண்ணிராக அவன் வருகின்றனர். அந்தப் புன்னைப் பெருமரப் பட்டைபோலப் பெண்ணினைப் பெயர்த்தெடுக்கின்றனர். கூடத்தில் கிடத்தி மூடிய விழியை நோக்குகின்றனர். வாடிய முகம் வடிவவேறுபட்டதையும், வாயிதழ் ஆடுவதையும், கண்ணிமைகள் அசைவதையும் காண்கின்றனர். எழில் விழி திறந்து “அத்தான்!” என மூச்செறிகின்றாள். பெற்றோர்.தம்மை உற்று நோக்குகின்றாள். முகம் கவிகின்றாள். பெற்றோரும் பிரிகின்றனர். ஒருநாள் வடக்கு நோக்கிச் செல்லும் வணிகக் கூட்டத்துடன் தன் அழகுமேனி தோன்றாமல் முக்காடிட்டுப் பயணமாகின்றாள். முன்னதாகப் பொன்முடியுடன் வணிகர் கூட்டம் டில்லி மாநகருக்கு இப்பால் உள்ள மகோதய முனி வனத்தில் முப்பது காதத் தொலைவில் முகாம் இடுகின்றது. அவரவர் உணவு தயாரிக்க முனைகின்றனர். பொன்முடி ஏதோ அலுவலாகக் குளக்கரைக்குச் செல்லுகின்றான். அப்போது ஆரியப் பெரியோர் ஐவர் வணிகக் கூட்டத்தினரிடம் போந்து தாம் நிகழ்த்த இருக்கும் வேள்விக்குப் பொன் வேண்டுகின்றனர். செய்தியைப் பொன்முடிக்குத் தெரிவிக்க, அவன் தாங்கள் சைவர் என்றும், உயிர்க்கொலை புரியும் வேள்விக்குப் பொன் ஈவதற்கில்லை என்றும் சொல்ல, வணிகர்கள் யாவரும் அக்கருத்தை ஏற்றுக்கொண்டு பொருள்தர மறுக்கின்றனர். ஆரியர்கள் ஐவரும் அடக்கிய சினத்துடன் அவ்விடத்தை விட்டு அகலுகின்றனர். முத்து வாணிகர் தம் அலுவலை முடித்துக்கொண்டு சொத்தும் கையுமாகத் திரும்புகையில் முன் இறங்கிய மகோதய முனிவர் வனத்தில் இறங்கி உணவு கொள்ளுகின்றனர். போகும்போது வேள்விசெய்யப் பொன் கேட்ட ஆரியர்கள் இக்கூட்டத்தைப் பார்த்தும் பாராதவர்போல் பதுங்கினர். தமிழர் அவர்களைக் கண்டு ஐயுற்றனர். தமது சொத்தும் ஆருயிரும் பறிபோகப் போகின்றன என்று அறிவுடைத் தமிழன் ஒருவன் அறிந்து கூறுகின்றான். தம் உணவை முடித்துக்கொண்டு புறப்படத் தொடங்கும்போது ஆரியர்