பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கராவின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு எதிர்க்கின்றனர்.தமிழரின் தலைகள் பல உருண்டன. வடவரில் சிலரும் மாய்ந்து போகின்றனர். தப்பிய சிற்சில தமிழர் வனத்தின் அப்புறத்திலுள்ள அழகிய ஊரின் பின்புறமாகப் பிரியும் வழியாகப் பொன்முடியோடு போய்ச் சேர்கின்றனர். சூறையாடிய துறவியர் “வைதிகம் பழித்தமாபாவி பொன்முடியின்மீது”கண் வைக்கின்றனர். அவன் பைதவி வனத்தின் பக்கமாகச் செல்லக் கூடும் என்று அவனைத் தீர்த்துக் கட்டச் சயந்தன் என்பானை அனுப்புகின்றனர். வடக்கினின்றும் பொன்முடியும் பிறரும் வர தெற்கினின்றும் வணிகருடன் பூங்கோதை வடதிசை நோக்கிச் செல்லுகின்றாள். தொலைவிலுள்ளபோதே இருவரும் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளுகின்றனர். "திச்சயமாய் அவர்தாம்” என்னுரைத்தாள் மங்கை: "திசம்” என்றாள் பூரித்தான் மெல்லி டைமேல் கொச்சவலம் இறுக்கினாள் சிரித்தாள் கைகள் கொட்டினாள் ஆடினாள் ஒட லானாள்! "பச்சைமயில், இங்கெங்கே! அடடா என்னே! பறத்துவந்து விட்டாளே! அவள்தான் என்று கச்சைதனை இறுக்கிஎதிர் ஓடி வந்தான் கடிதோடினான், "அத்தான்” என்றழைத்தே! நேர்த்தோடும் இருமுகமும் நெருங்கும் போது நெடுமரத்தின் மறைவினின்று நீள்வாள்' ஒன்று பாய்ந்ததுமேல் அவன்முகத்தை அணைத்தாள் தாவிப் பனீரென்று முத்தமொன்று பெற்றாள் சேயின் சாந்தமுகத் தனைக் கண்டான் உடலைக் கானாள்: தலைகமந்த கையோடு தரையிற் சாய்த்தாள்! தீந்தமிழர் உயர்வினுக்குச் செத்தான்! அன்பன் செத்ததற்குச் செத்தாள்.அத் தென்னாட்டன்னம்: இத்துடன் காவியம் நிறைவுபெறுகின்றது.இரண்டாம் பகுதியாக அமைந்துள்ள குமரகுருபரரின் வரலாறு காவியத்தின் வரலாற்றிற்குப் பொருந்துமாயினும் காவியத்தின் சுவையை ஒரளவு சிதைப்பதாக அமைகின்றது. ஐந்து முத்தங்கள்: இக்காவியத்தில் ஐந்து முத்தங்களைக் காண்கின்றோம்.