பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தரின் காவியங்கள் 21 முதலாவது வள்ளியூர்த் தென்புறத்து வனசப்பூப் பொய்கை தன்னில் பூங்கோதை நீராடும்போது மங்கையர் இனமலர் அழகுகண்டு "இச்”சென்றுமுத்தம்தருகின்றனர்.இதுமங்கையர் மலருக்கீந்தமுத்தம்" இரண்டாவது: பூங்கோதை நீர்க்குடத்தைக் “கையலுத்துப் போகுதென்று மரத்தின் வேர்மேல் கடிது வைக்கின்றாள். “அத்தான், என்னை நீர் மறந்தீர் என்று நினைத்தேன்” என்று பூங்கோதை கூறும்போது பொன்முடி அவளை வெடுக்கென்று அணைக்க, அவள் 'விடாதீர்” என்கின்றாள். கையிரண்டும் மெய்யிறுக இதழ்தி லத்தில் கனஉதட்டை ஊன்றினான் விதைத்தான் முத்தம்" இது காதலன் காதலிக்கு வழங்கிய முதல் முத்தம்! மூன்றாவது நள்ளிருளில் கிள்ளை வீட்டிற்குச் சென்றவன், ஓங்கார மாய்த்தடவி அன்பின் உயர்பொருளைத் தாங்கா மகிழ்ச்சியுடன் தான்பிடித்துப் பூங்கொடியை மார்போ டனைத்து மணற்கிழங்காய்க் கன்னத்தில் "வேரோடு முத்தம் பறித்தான்!” இது காதலன் காதலிக்குத் தந்த இரண்டாம் முத்தம்; காவியத்தில் மூன்றாவது முத்தம். நான்காவது: பண்டார உடையுடன் விடியற் காலையில் பொன்முடி பூங்கோதை இல்லத்திற்குச் செல்லுகின்றான். பூங்கோதையின் அன்னை பால் கறந்து கொண்டிருக்கின்றாள். தாமரைபோய்ச் சந்தனத்தில் புதைந்த தைப்போல தமிழ்ச்சுவடிக் கன்னத்தில், இதழ்உணர்வை நேமமுறச் செலுத்திநறுங் கவிச்சுவைகள நெடுமூச்சு கொண்டமட்டும் உறிஞ்சி நின்று மாமியவள் பால்கறந்து முடிக்க, இங்கு மருமகனும் "இச்”சென்று முடித்தான் முத்தம்!" இது நான்காவது முத்தம்; காவியத்தில் காதலன் காதலிக்கு நல்கிய மூன்றாவது முத்தம். 15. எ.பா.மு. 2. பக். 7 16. இயல் - 3 - பக். 11 17. எ.பா.மு. 6- பக். 19 18. எ.பா.மு. 10 - பக். 33