பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 காவின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு ஐந்தாவது வாணிகப்பணியை முடித்துக்கொண்டு வணிகர்களுடன் பொன்முடி திரும்பும்போது பளிரென்று முத்தமொன்று பெறுகின்றாள். சேயின் தலைதான் அவள் கையில்; உடல் காணப்பெறவில்லை. இதுதான் காவியத்தின் ஐந்தாவது முத்தம், காதலி பெற்றஇறுதி முத்தம் எதிர்பாராத முத்தம்.இதனைக் கவிஞர் சிவமுத்தம் என்று குறிப்பிடுகின்றார்." இது காவியத்தில் ஐந்தாவது முத்தக் உவமை யழகும் செந்தமிழ்ச் சுவையும் அமைந்து பாடியவாய் தேனுறும் பான்மையுடன் திகழும் இது சிறந்ததொரு காவியம். யானைத் தந்தத்தால் இயன்ற அழகிய பதுமைபோல் இது தொடுவதற்கும் இனிமை பயக்கின்றது; படிப்பதற்கும் சுவைவிருந்து நல்குகின்றது. "இஃது அழகான துன்ப இயல் சொல்லோவியம்’. 4. தமிழச்சியின் கத்தி இஃது ஒரு சிறு காவியம். தில்லி. பாதுஷாவின் ஆட்சிக்கு உட்பட்டது ஆர்க்காட்டுப் பகுதி. இப்பகுதியில் அடங்கியவை 172 பாளையப்பட்டுகள்.இவற்றில் ஒன்று செஞ்சிப்பாளையப்பட்டு இதனை ஆள்கின்றவன் தேசிங்கு என்ற வடக்கன்; தமிழரை இகழ்பவன். ஒரு சமயம் சிப்பாய்களின் தலைவனான சுபேதார் கதரிசன் சிங்கும் அவன் தோழனான மற்றொரு சுபேதார் இரஞ்சித் சிங்கும் துச்சேரி சென்று வளவனூர் வழியாகத் திரும்புகையில் வளவனூர் அருகில் ஒரு தென்னந் தோப்பில் திம்மன் என்ற வேளாண் மகனைக் காண்கின்றனர். திம்மன் அவர்கட்கு இளநீர் விருந்து அளித்ததுடன் இல்லத்திற்கு அழைத்துச் சென்று உணவு விருந்தும் அளிக்கின்றான். கதரிசன் சிங்கு திம்மன் மனைவி கப்பம்மாளின்மீது ஆசை வைக்கின்றான். தோப்பில் கட்டி வைத்த குதிரைகளைப் பார்த்து வருமாறு திம்மனை அனுப்புகின்றனர் வடக்கர்கள். சுதரிசன சிங்கு தன் உள்ளத்தைச் சிறிது அவிழ்க்கின்றான். பருப்பு வேகவில்லை. இவனது தீய எண்ணத்தை அவள் அறிந்து கொண்டதுதான் விளைந்த 翡懿活憩。 19. எ. பா.மு.21-பக். 60