பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தரின்காவியங்கள் 23 தனியாகத் திம்மனை அழைத்துச் சென்று திம்மனுக்குச் சிப்பாய் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்ட, அவன் அந்த ஆசை வலையில் வீழ்கின்றான். திம்மன் சுப்பம்மாவையும் இட்டுக்கொண்டு ஒரு வண்டியில் செஞ்சிக் கோட்டைக்குச் செல்லுகின்றான். வண்டியை ஒட்டிக் குதிரைமீது செல்லுகின்றான் கதரிசன். வழியில் யாரோ சிலர் வண்டியை நிறுத்தி அவர்களை யார் என்று வினவுகின்றனர். இதற்குள் கதரிசன் அஞ்சி, குதிரையை முடுக்கி விரைந்து மறைகின்றான். திம்மன் உண்மையைக் கூற, வந்தவர்கள் வடக்கர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுமாறு கூறுகின்றனர். சுப்பம்மா அவர்களிடம் ஒரு குத்துக் கத்தியைப் பெறுகின்றாள் பாதுகாப்பாக இருப்பதற்கு. அவர்கள் செஞ்சியை அடைந்ததும் சுதரிசன் அவர்கட்குச் சேரியொன்றில் குடிசை அமைத்துத் தருகின்றான். சுப்பம்மாவை குப்பு, முருகி என்ற இரு தீய மாதர்களிடம் “பாதுகாப்பாக” இருக்குமாறு ஏற்பாடு செய்கின்றான் கதரிசன். திம்மனுக்குப் பொய்யுடை தந்து கோட்டைக்கு இட்டுச் சென்று அவனை ஒரு மூலையில் அடைத்து விடுகின்றான். அன்றிரவு கதரிசன் சுப்பம்மாவிடம் தன் விருப்பத்தைக் காட்டுகின்றான். சுப்பம்மாள் மசியவில்லை. குடிசைக்குத் தீயிட்டு அஃது எரியும்போது சுப்பம்மா உள்ளே திண்டாடுகின்றாள். இந்நிலையில் சுதரிசன் தன் உருவை மறைத்துக்கொண்டு சுப்பம்மாவின் கையைப் பிடிக்கின்றான். சுப்பம்மாவின் கத்தி தொட்ட கையை விலக்கிவிடுகின்றது. கதரிசனும் மறைகின்றான். சுப்பம்மா சேரியில் அடைக்கலம் புக, செங்கான் என்ற சேரி முதியோன் சுப்பம்மாவைத் தன் இல்லத்தில் இருக்குமாறு ஏற்பாடு செய்கின்றான். மறுநாள் இரவு சுதரிசனின் எண்ணப்படி குப்புவும் முருகியும் செங்கான் வழியாக நஞ்சிட்ட உணவை அனுப்புகின்றனர். இதனையறியாத செங்கான் அவ்வுணவைச் சுப்பம்மாவிடம் வைத்துச் செல்ல, அவள் அதனை உண்டு மயங்கி விழ, பதுங்கியிருந்த கதரிசன் உள்ளே புகுந்து சுப்பம்மாவின் கற்பைக் கெடுத்துச் செல்லுகின்றான். மயக்கம் தெளிந்த சுப்பம்மா தான் கற்பிழந்ததை உணர்கின்றாள்; செங்கானையும் உசாவி உண்மையைத்