பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சுராவின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு தெளிகின்றாள். கத்தியை உயர்த்திக்கொண்டு ஒட, செங்கான் உடன் ஒட சேரியும் ஒடுகின்றது. மனம் தாளாமல் சுதரிசனின் இல்லத்தின் கதவைத் தட்ட அவன் திறந்துகொண்டு வெளியில் வர, அவன் மார்பில் சுப்பம்மா குத்துக் கத்தியைப் பாய்ச்சுகின்றாள். கதரிசனின் ஆவி பிரிகின்றது. அந்த நேரத்தில் ஒருபுறம் ஒதுங்கியிருந்த குப்புவும் முருகியும் செங்கானின் கொடுவாளால் செத்தொழிகின்றனர். துயரம் தாங்காத சுப்பம்மா"அத்தான், அத்தான்” என்று கூவிய வண்ணம் கோட்டையிற் புகுகின்றாள்; பயன் இல்லை; வாளா திரும்புகின்றாள். செங்கானும் சுப்பம்மாவும் ஓர் ஆலின் நிழலில் தங்கியுள்ளனர் - திம்மனைப் பார்க்கும் ஆசையால், இந்நிலையில் கொலைச் செய்தி பரவுகின்றது. தேசிங்கு கோட்டையினின்றும் வெளிப்போந்து சுதரிசனின் உடலருகில் நின்றுகொண்டு அங்குக் குழுமியிருந்த கூட்ட மக்களை, நோக்கி "இது யார் செய்த வேலை ?” என்று உசாவுகின்றான். அங்கு இருந்த இரஞ்சித் சிங்கு தனக்குத் தெரிந்தவற்றைக் கூறுகின்றான். "எங்கே அந்தத் திம்மன் பெண்டாட்டி” “எங்கே அந்தத் திம்மன்” என்று அதிர, "நான் தான்” என்று கூறிக் கொண்டு எதிர் வருகின்றான் திம்மன். "திம்மனைப் பிணித்து இழுத்துக்கொண்டே சென்று “சுப்பம்மாவைக் காட்டச் சொல்லுங்கள். நீங்களும் தேடுங்கள்” என்று மன்னன் ஆணையிடுகின்றான். சிப்பாய்கள் அவ்வாறே கூட்டிச் செல்லுகின்றனர். செங்கானும் சுப்பம்மாவும் சிப்பாய்களைக் கொன்று திம்மனை மீட்கின்றனர். சுப்பம்மா நடந்தவற்றைக் கூறி, "நான் சாகின்றேன், நீர் நலமாக இல்லம் ஏகுமின்” என்று சொல்லித் திம்மனைக் காக்கின்றாள். இருவரும் அருகிலிருந்த ஒர் ஆலமரத்தின்மீது உட்கார்ந்த நிலையில் இறப்பை எதிர்பார்த்து வரவேற்பும் வாழ்த்தும் கூறிப் பாடிக் கொண்டுள்ளனர். செங்கான் வேவு தேடுபவர் கூட்டம் வருகின்றதா என்று வேவு பார்க்கின்றான். சில சிப்பாய்கள் வந்து அதே ஆலமரத்தடியில் தங்குகின்றனர். "நாம்திம்மனையும் சுப்பம்மாவையும் சுறுசுறுப்புடன் தேடுகின்றோமோ! அல்லது ஏனோ தானோ என்றிருக்கின்றோமோ? என்று மேற்பார்வை பார்க்கத் தேசிங்கு அரசரே வரக் கூடும்” என்று அவர்கள் பேசிக்